Sunday, January 4, 2009

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் அமைப்பு மீது நடவடிக்கை அரசு அதிகாரிகள் பேட்டி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் அமைப்பு மீது நடவடிக்கை அரசு அதிகாரிகள் பேட்டி


சென்னை, ஜன.4-

அரசு மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வரும் `பான்யன்' அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம், நர்சுகள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன.

இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் டாக்டர் ஆர்.சத்யநாதன், மனநல மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் டாக்டர் எஸ்.நம்பி ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒப்பந்தம்

தெருக்களில் அனாதையாக திரியும் மனநோயாளிகளை பிடித்து கோர்ட்டு மூலம் அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் மூலம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்து, சிகிச்சைக்குப் பிறகு அந்த மனநோயாளிகளை அவர்களது குடும்பத்தினருடன் கொண்டு போய் ஒப்படைப்பதற்காக `பான்யன்' என்ற அமைப்புடன் அரசு மனநல காப்பகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இப்படி இந்த அமைப்பினர் கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்து சேர்த்தவர்களில் 3-ல் ஒரு பங்கு மனநோயாளிகளைத்தான் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மற்றவர்கள் இங்கேதான் நிரந்தரமாக தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியிருப்பவர்களில் 150 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி

`பான்யன்' அமைப்பினர் தங்களது கடமையை சரிவர செய்யாமல் இருப்பதுடன் அரசு மனநல காப்பகத்திற்கு கெட்டபெயர் ஏற்படும் வகையிலும் நடந்து கொள்கின்றனர். தேவையில்லாமல் நிர்வாகத்தில் தலையிடுகின்றனர். அந்த அமைப்பிற்காக தனியே 2 வார்டு ஒதுக்க வேண்டும். அரசு மனநல காப்பகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இந்த மனநல காப்பகம், மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் ஆயிரக்கணக்கான நர்சுகளுக்கும் மனநல பயிற்சி அளித்து வருகிறது. எனவே, `பான்யன்' அமைப்பினர் எங்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையில்லை. இங்கு போதிய கழிப்பறை வசதியில்லை என்று கூறியிருக்கிறார்கள். 7 பேருக்கு ஒரு கழிப்பறை உள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால், கெட்டபெயர் ஏற்படுத்துவதை ஏற்க முடியாது.

சட்டப்படி நடவடிக்கை

பல வழிகளில் இந்த அரசு நிறுவனத்திற்கு கெட்டபெயர் ஏற்படுத்தி வரும் `பான்யன்` அமைப்பு மீது நிர்வாக ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை, அரசு மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம், அரசு மனநல காப்பக தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவை கோரியுள்ளன. எனவே, `பான்யன்' அமைப்புடன் அரசு மனநல காப்பகம் செய்து கொண்ட ஒப்பந்தம் புதுப்பிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

வேலூர், ஜன. 3: வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா அடுக்கம்பாறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் கோயில்களில் துப்புறவுப் பணி, தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவற்றை நடத்திய மாணவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

முகாமின் நிறைவு விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எச். கதிஜா அசிம் சுல்தானா தலைமை தாங்கினார். பி. கெüஸ்பாஷா வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி கோபிநாத் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.மூர்த்தி மாணவர்களுக்கு பரிசளித்து சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் ஜி. சுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் ராதா திருநாவுக்கரசு மற்றும் எ.ஜி. திருமலைராஜ், இராம. முரளி, திட்ட அலுவலர் சி. வீரமணி, உதவித் திட்ட அலுவலர் ஏ.பி. மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு

ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு

இன்ஷாஅல்லாஹ் நாளை 5.1.2009 திங்கட்கிழமை ச‌ர்வ‌தேச‌ப்பிறை அடிப்ப‌டையில் தாஸுஆ தின‌மாக‌வும் ம‌றுநாள் செவ்வாய்க்கிழமை ஆஷுரா தின‌மாக‌வும் இருப்ப‌தால் அனைத்து ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளும் அல்லாஹ்வுடைய‌ தூத‌ரால் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ நோன்பை நோற்று பாவ‌மீட்சி பெறுமாறு வேண்டுகின்றோம்