Saturday, October 4, 2008

தோப்புத்துறை மர்கஸ் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை


நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் கடந்த 30-09-2008 அன்று காலை 6:45 மணியளவில் தோப்புத்துறை மர்கஸ் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை மர்கஸ் ஈத்கா திடலில் சிறப்பாக நடந்தேரியது,
இதில் மர்கஸ் இமாம் யாசிர் அரபாத் பிர்தௌஸ் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து அதன் பிறகு பெருநாள் (குத்பா) உரையாற்றினார்கள். இதில் மக்கள் திரளாக கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹமதுலில்லாஹ், அனைவருக்கும் மதியம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது .


Sunday, September 28, 2008

கோவை அய்யூப் அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு

கோவை அய்யூப் அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு
"மரணமும் மறுமையும்..."

குவைத் அவ்காஃப் அமைச்சகத்துடன் இந்திய தமிழ் ஜாலியாத் இஸ்லாமிய வழிகாட்டி (IGC) இணைந்து கோவை அய்யூப் அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த வியாழன் 25-09-2008 அன்று குவைத் மஸ்ஜித் அல் கபீர் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Visit http://igckwt.blogspot.com/ for further details.

திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்


நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி தொடர் குண்டு வெடிப்புகளால், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருந்தனர். கடந்த வெள்ளி, செப்டம்பர் 19 அன்று காலை, ஏறத்தாழ முழுதும் நடுத்தர முஸ்லிம்கள் வாழும் டில்லி ஜாமிஆ நகரில் பரபரப்பான காட்சிகள் சில அரங்கேறின. "என்கவுண்ட்டர்" என்று காவல்துறையினரால் வர்ணிக்கப்படும் அந்நிகழ்வில், அண்மையில் அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி ஆகிய நகரங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளுக்கான மூலகர்த்தா என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிஃப் என்பவரும் அவருடைய தோழர் ஃபக்ருத்தீன் (எ) சாஜித் என்பவரும் கொல்லப் பட்டனர். தீவிரவாதி என்று 'கருதப்படும்' மூன்றாமவர் சம்பவ இடத்திலும் தப்பியோடிய இருவரில் ஒருவர் அன்று மாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். இதில், டில்லி காவல்துறை சிறப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' மோகன் சந்த் சர்மா காயமடைந்து, மருத்துவ மனையில் உயிரிழந்தார்...மேலும் வாசிப்பதற்கு
நன்றி : சத்தியமார்க்கம் தளம்

சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறவருமான சான்றிதழ் தேவை இல்லை

சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறவருமான சான்றிதழ் தேவை இல்லை
உத்தரவிட்ட கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மைஆணையம் நன்றி



பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டசிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறஅதிகாரிகள் அளிக்கும் வருமான சான்றிதழ் தேவை இல்லை என்று உத்தரவிட்டமுதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மைஆணையம் நன்றி தெரிவித்தன.
கல்வி உதவித்தொகை
பள்ளி மற்றும் கல்லூரிகளில் (தொழில் கல்வி உள்பட) படிக்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஆணையிட்டது.
இந்த மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுகளில் 50 சதவீத மார்க்கு எடுத்துஇருக்கவேண்டும். 1-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை உள்ள மாணவர்கள்பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள்இருக்கவேண்டும். இறுதி தேர்வில் 50 சதவீத மார்க்கு எடுத்து இருக்கவேண்டும். .டி.. படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள்இருக்கவேண்டும். தொழில்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும்மாணவர்களின் பெற்றோர்கள் வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள்இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி உத்தரவு
இந்த உத்தரவுப்படி வருவாய் அலுவலரின் சான்றிதழ், நோட்டரி பப்ளிக் சான்றிதழ்ஆகியவை தேவைப்பட்டது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். எனவே அந்த சான்றிதழ்கள் இல்லாமல் உதவித்தொகை வழங்க ஏற்பாடுசெய்யவேண்டும் என்று இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதை அந்த நேரமே ஏற்று உடனடியாக சான்றிதழ் இல்லாமல் வழங்க கருணாநிதிஉத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்சிறுபான்மையினத்தவர் என்பதற்கான சாதி பற்றிய விவரங்கள் ரூ.10 மதிப்புள்ளகோர்ட்டு சாரா முத்திரை தாளில் எழுதி பெற்றோர் அல்லது பாதுகாவலர் உறுதிமொழி சுய கையொப்பம் இட்டு சமர்ப்பித்தால் போதும். நோட்டரி பப்ளிக்கையொப்பம் தேவை இல்லை, வருவாய் அலுவலரிடம் இருந்து சான்றுபெறத்தேவை இல்லை. வருமான அதிகாரியிடம் இருந்து வருமான சான்றுபெற்று தரவேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இது குறித்து அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனஅதிகாரிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி
முதல் அமைச்சரை சந்தித்த இஸ்லாமிய இலக்கிய கழக சிறப்பு நெறியாளர்கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் கேப்டன் என்..அமீர் அலி, பொதுசெயலாளர்எஸ்.எம்.இதயதுல்லா, துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் மற்றும்பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜகான், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோர் முதல் அமைச்சர் கருணாநிதிக்குநன்றி தெரிவித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
ரம்ஜான் பரிசு
கடந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டையும், இந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக சிறுபான்மை மாணவர்களுக்குஉதவித்தொகை பெற எளிமைப்படுத்தி உத்தரவிட்டு எங்களை மனநிறைவுஏற்படுத்தியதற்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பல மாநிலங்கள் சிறுபான்மை மாணவர்களின் உதவித்தொகைக்கு ஒதுக்கியதொகையை செலவழிப்பதில்லை. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும்மேற்பட்ட பிளஸ்-2 மாணவர்களும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்லூரிமாணவர்களும் பயன் அடைந்தனர்.
ஆனால் இந்த வருடம் தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்கஉள்ளனர். எனவே பிற மாநிலங்களில் பயன்படுத்தாத தொகையைதமிழ்நாட்டுக்கு திருப்பும் படி மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் அனுப்பவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=441006&disdate=9/27/2008

நன்றி : முதுவை ஹிதாயத்