Saturday, June 28, 2008

ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஊர் பள்ளிவாசல் தடை!

தவ்ஹீத்வாதியின் சிறிய தாயாரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஊர் பள்ளிவாசல் தடை!

  • அடக்கஸ்தலத்தின் பூட்டை உடைத்து தவ்ஹீத் சகோதரர் ஜனாசாவைநல்லடக்கம் செய்தனர்!
  • தஞ்சை வலங்கைமான் சம்பவம்!

தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் -இல் 15-06-08 (ஞாயிற்றுக் கிழமை) அன்நூர் இஸ்லாமிக் கல்லூரியின் தலைவருமான சகோ: ஷாஜகான் அவர்களின் சின்ன தாயார் அவர்கள் இயற்கை எய்தினார்கள்.


அவர்களின் நல்லடக்கத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேலையில் 'தன் சின்ன தாயாருக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஷாஜகான் அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறை சமாதானத்தில் இறங்கியும் சமாதானம் ஆகாததை தொடர்ந்து பள்ளியின் அடக்கஸ்தலத்தின் பூட்டு உடைக்கபட்டு முறைப்படி ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி: த.த.ஜ இணையத்தளம்
இன்சா அல்லாஹ்.... வருகின்ற 13(July)
ஆம் தேதி என்னுடைய திருமணம் நடக்க இருப்பதால் நமது சமுதாய செய்திகள் வெளியிடவதில் தாமதம் ஏற்படும் , நமதூரில் முறையான இணைய தொடர்பு வசதி இல்லாததால் இச் சிரமத்திற்கு வருந்து கிறேன்...


மேலும் எனது திருமணம் வரதட்சணை மற்றும் ஆடம்பரம் இன்றி நடக்க இருக்கிறது , இத் திருமணம் நல்லவிதமாக நடந்து முடிய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்


என்றும் உங்கள் சகோதரன்

ஆதம்.ஆரிபின்
இந்தியாவில் தொடர்க்கு.... 0091 97863 85245 , அமீரகத்தில் 00971 501657853

Wednesday, June 25, 2008

ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் 25-06-2008 (புதன்) மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Tuesday, June 24, 2008

முதுகுளத்தூரில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா.

முதுகுளத்தூரில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா 28-06-2008 அன்று மாலை 6 மணியளவில் தேரிருவேலி முக்குரோடு வேன் ஸ்டாண்ட் திடலில் நடைபெற உள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் M.வாவா ராவுத்தர் கூறுகையில்….நமது நகர மக்கள் அவசர காலங்களில் மற்றும் பிரசவ நேரங்களில் வாகனங்கள் கிடைக்கமால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு நேரங்களில் காலதாமதாகவே ஆஸ்பத்திக்கு செல்லும் நிலையுள்ளது. இதனால் சொல்லமுடியாத பலதுயங்கரளுக்கு ஆளாகின்றனர்.அதுபோல் இறந்தவர்களின் உடலை பாதுகாக்க பிரிஜர் பாக்ஸ் அவசியமானதகும். இவைகளுக்கெல்லாம் நாம் பரமக்குடி போன்ற பக்கத்து ஊர்களையே நம்பியுள்ளோம்.

எனவே தமுமுகவின் சார்பில் வசூலித்து குறைந்த கட்டணத்தில் அனைவரும் பலன் பெரும் வகையில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் பாக்ஸ் அர்ப்பணிக்க உள்ளோம்.28-06-08 அன்று மாலை 6 மணியளவில் மூன்று MLAக்களின் வாழ்த்துரையுடன்,மூன்று ஜமாத்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் வக்பு வாரியத்தலைவர்,எங்கள் இயக்கச் செயலாளர் சகோ.ஹைதர் அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை வழங்கிறார்.
ஏழைகளுக்கு மிகவும் சலுகை கட்டணத்திலும், அவசர விபத்து மற்றும் முக்கிய நேரங்களில் சேவை செய்யவும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும் என்று தகவலை கூறினார்.

This post was submitted by முதுவை ஹிதாயத்.

Monday, June 23, 2008

முத்துப்பேட்டை மின் வாரியத்தை கண்டித்து மாபெரும் தொடர் போராட்டம் தமுமுக அறிவிப்பு

முத்துப்பேட்டை பகுதியில் அடிக்கடி ஏற்பட்டுவரும் தொடர் மின் வெட்டு காரணமாக பல முறை அரசு இயந்திரங்களுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை செவிசாய்க்காத மின் வாரியத்தின் அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்து 12.07.2008 அன்று மாபெரும் தொடர் போராட்டம் முத்துப்பேட்டை தமுமுக சார்பில் நடைபெரும் என 22.07.08 அன்று நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Sunday, June 22, 2008

ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவாரூர், நாகூர் மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி இடையிலான ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுகவின் மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் சி.கண்ணையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மார்க்கத்தில் ஏற்கனவே அகலப் பாதை போடும் பணி முடிவடைந்துவிட்டது. சோதனை ஓட்டமும் மார்ச் மாதத்திலேயே முடிந்து விட்டது. இருப்பினும் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்காமல் உள்ளது.

இந்த மார்க்கத்தில் விரைவில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க ரயில்வே நிர்வாகம் உரிய, விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேன்டும் என்று கோரியுள்ளார்

சைபர் கிரைம் படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) இணைந்து, முதுநிலை சைபர் சட்ட பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் அறிமுக விழா, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், இக்னோ இணைவேந்தர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா, இக்னோ சட்டப் பள்ளி இயக்குநர் கிருஷ்ணாராவ், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் வணங்காமுடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சைபர் சட்ட பட்டயப்படிப்பு குறித்து இக்னோ இணைவேந்தர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது: முதுநிலை சைபர் சட்ட பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள், தரமணியில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. இந்த படிப்பு 6 மாத காலம் கொண்டது. கல்விக் கட்டணம் ரூ.5,000. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.100.
அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்களை பெற ரூ.150க்கு டிடி எடுத்து, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள், அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் வரும் 23ம் தேதி (நாளை) முதல் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

www.nellaieruvadi.com