Saturday, September 13, 2008

அமீரக தமிழ் சகோதரர்கள் தாங்கள் பித்ரா வை தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகளிடம்...

முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வியாழக்கிழமை பிற்பகல் (11-09-08) அன்று நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா, பாஜக துணைத் தலைவர் எச். ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் வழியாக இந்த ஊர்வலம் வலம் வந்தது. இதற்கு அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதனை இந்து முன்னணியினர் கடுமையாக ஆச்சேபித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு கற்களும். செருப்புகளும் வீசப்பட்டன. இதில், காவல் கண்காணிப்பாளர் அமீத்குமார் சிங், தலைமைக் காவலர் செல்வமணி ஆகியோர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. அப்போது போலிஸார் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து தடியடி நடத்தினர். இதனால், பள்ளிவாசலில் இருந்த பலர் காயமடைந்தனர். பின்னர் 32 முஸ்லிம்களை போலிஸார் கைது செய்தனர்.

முஸ்லிம்கள் மீது தொடரும் தடியடி மனித நீதிப் பாசறை கண்டனம்


முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கலவர நோக்கில் வந்த சங்பரிவார சக்திகளுக்கு ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக, புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைக் கூட கொடுக்காமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக பள்ளிவாசலுக்குள் "பூட்ஸ்' கால்களுடன் நுழைந்து ரத்தம் வழிந்தோட மயங்கி விழும் அளவிற்கு நோன்பு வைத்திருந்த முஸ்லிம்களைத் தாக்கி பள்ளிவாசல் ஜன்னல் களையும் உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்த அப்பாவி முஸ்லிம்களை கைது செய்திருக்கின்றனர். காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித் தனமான கொடூரச் செயலை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

தடியடியில் காயம்பட்ட முஸ்லிம்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் இரத்தம் வழிந்தோடும் நிலையில் பள்ளிவாசலுக்குள்ளே தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற கொடூர செயலை அரங்கேற்றியிருக்கின்றது காவல்துறை. இதை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் வழியாஉகவும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தெருக்கள் வழியாகவும் சென்று மததுவேஷமாக பேசி முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அதில் பலிகடாக்களாக ஆக்க திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறிக் கொண்டு கடையநல்லூர், பேர்ணாம் பட்டு, வேலூர், வேடசந்தூர், திண்டுக்கல், முத்துப் பேட்டை என முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தடியடித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை முஸ்லிம்களிடையே ஆழ்ந்த அதிர்ச்சியையும் பெரும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாகவும் கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்தான் சமூக அமைதி கெடுவதற்கும், மதக் கலவரத்திற்கும் காரணம் என பல வருடங்களாக பல உண்மையறிவும் குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்தும் இந்துக்களும், முஸ்லிம்களும் பல்வேறு சமயங்களில் கருத்து தெரிவித்தும் கூட இதில் அரசு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே ஏன்? மக்கள் ரத்தம் தானே சிந்துகிறது என்ற அலட்சியமா? எனும் கேள்வி மக்கள் மனதில் எழும்பியுள்ளது.

ஆகவே தடியடி நடத்தி முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையின் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. இந்த கொலைவெறியாட்டத்தை முன்னின்று நடத்தி சிறுபான்மை விரோதப் போக்குடனும் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அமீத் குமார் சிங், திருச்சி மாவட்ட எஸ்.பி. கலிய மூர்த்தி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாத் குமார், எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சிவ பாஸ்கரன், மன்னார்குடி டி.எஸ்.பி. மாணிக்க வாசகம் ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாக கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் ஊர்வலத்தை ஒருபோதும் அரசு அனுமதிக்கக் கூடாது. சதுர்த்தி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி அல்லாத மாற்றுப் பாதை அமைத்து நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையை மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது.

மேலும் வருங்காலங்களில் முத்துப்பேட்டை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் அமைதிக்கான இந்த செயல்திட்டத்தை அமுல்படுத்தி மாநிலம் முழுவதும் நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையும் மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது. முத்துப்பேட்டையில் தனது காட்டுமிராண்டித் தனத்தை மறைப்பதற்காக காவல்துறையினர் பல அப்பாவி முஸ்லிம்களைகைது செய்துள்ளனர். காவல்துறையால் திட்டமிட்டு பலிகடாக்களாக ஆக்கப்பட்ட இந்த அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மனித நீதிப் பாசறை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. தடியடியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.


இப்படிக்கு
அ. ஃபக்ருதீன்,
மாநிலச் செயலாளர்,
மனித நீதிப் பாசறை.

தமுமுகவுக்கா? ததஜவுக்கா?

இறைவனின் முழு அருளும் இரு உலகிலும் காத்திருக்க
தமுமுகவுக்கா? ததஜவுக்கா?

இன்றைய நிலையில் தமிழக முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குபவர்கள் முஸ்லிம் பெயரைத் தன்னில் கொண்ட தமுமுக -வும் ஏகத்துவத்தைத் தன் பெயரில் கொண்ட ததஜவும் தான்.இந்த இரு அரசியல் அணிகளும் ஒன்றிணைந்தால் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
இவர்கள் பிரிந்து நிற்பதற்காகச் சொல்லப்படும் காரணிகளில் முக்கியமானது

பணப்பிரச்சனை.

இவர்கள் இடையிலான ஒற்றுமை:

இரு அணிகளுமே முஸ்லிம்கள்.இனி இவர்கள் பிரிந்து நின்று அணி சேர்ந்துள்ளவர்களைக் குறித்துப் பார்ப்போம்:

முதலில் தமுமுக ஆதரவு தெரிவிக்கும் கருணாநிதி.

1. ஜெயலலிதா இறக்குமதி செய்த பாஜக-வை தமிழகத்தில் வளர்த்தி விட்டவர்.

2. முஸ்லிம்களுக்கு நெஞ்சில் இடம் தருவதாக அல்வா கொடுப்பதில் நீண்ட நெடிய சுமார் 40 வருட பாரம்பரிய அனுபவம் உள்ளவர்.

3. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவிகளை 10 வருடம் சிறையிலிட்டு 150 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சீரழித்தவர்..

4. அந்தக் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 19 முஸ்லிம்களின் படுகொலை சம்பவத்தை வெற்றிகரமாக பாசிச சங்க்பரிவாரக் கும்பலுடன் இணைந்து நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தவர்.

5. அயல் ராஜ்யங்களான இலங்கை மற்றும் மலேசியாவில் குடியுரிமைப் பெற்று அந்நாட்டவர்களாக வாழ்பவர்களுக்குப் பிரச்சனை என்றவுடன் தன் நிலை மறந்து கவிதையாகவும் உரைநடையாகவும் ஆற்றாமையை வெளிப்படுத்தியவர், இந்தியாவிற்கு உள்ளேயே இந்தியக் குடிமகன்களாக வாழும் குஜராத் முஸ்லிம்கள் 3000க்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாகப் படுகொலைச் செய்யப்பட்டச் சம்பவத்தைக் குறித்துக்கருத்துக் கேட்கப்பட்ட பொழுது, 'அது அம்மாநிலத்தின் உள் பிரச்சனை' எனக் கூறி நழுவியவர்.

(கருணாநிதி ஓர் பச்சை துரோகச் சந்தர்ப்பவாதி என்பதற்கு இதனை விட வேறு ஆதாரம் ஏதும் தேவையில்லை).இப்படிப்பட்ட அயோக்கியனுடன் தான் சகோதரர்களிடமிருந்துப் பிரிந்து தமுமுக கூட்டணி வைத்துள்ளது.

இனி எம்.ஜி.ஆர் வளர்த்த அண்ணா திராவிட கட்சியை சுருட்டி கக்கத்தில் வைத்துள்ள ஜெயலலிதா குறித்து:சட்டமன்றத்திலேயே தன்னை ஓர் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட இவளைக் குறித்துக் கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

எனினும்,

1. இறையில்லமான பாபர் மசூதியை இடிக்க ஆதரவு தெரிவித்த இந்தியாவிலேயே ஒரே மாநில முதலமைச்சர் மட்டுமன்றி தமிழகத்திலிருந்து பாபர் மசூதியை இடிக்கக் கரசேவக ரவுடிகளை அரசு செலவிலேயே அனுப்பியவள்.

2. வடக்கில் இரத்த அறுவடை செய்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான பாஜகவைத் தமிழகத்திற்கு முதன்முதலாக இறக்குமதி செய்த, அண்ணா திராவிடக் கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் பாப்பாத்தி!!!

3. 3000க்கு மேற்பட்ட முஸ்லிம்களை உயிரோடு அறுத்தும் எரித்தும் நரதாண்டவமாடியச் சம்பவத்திற்குப் பிறகு நரமாமிச உண்ணி மோடி தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அடக்கமுடியாத மகிழ்ச்சியில் நேரடியாகவே சென்று பூங்கொத்து வழங்கி (3000 முஸ்லிம்களைக் கொன்று குவித்து வெற்றி வாகை சூடியதற்கு) வாழ்த்துக் கூறிய தேசப்பற்று மிக்க தாரிகை!!!. (முஸ்லிம்களைக் கருவறுப்பதில் ஆனந்தமடையும்பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த இவள் முஸ்லிம்கள் என வரும் பொழுது தனது இனத்தோடு சேர்ந்துக் கொள்வாள் என்பதற்கு இதனைவிட வேறு பெரிய தெளிவு ஏதும் தேவையில்லை)

4. இந்தியா அடக்குமுறையில் இருந்த ஆங்கிலேயன் காலத்திலேயே இருந்த உரிமை சுதந்திரத்திற்குப் பின் துரோக ஆட்சியாளர்களால் வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட உரிமை - இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு எப்பொழுதுமே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எங்குமே கிடைக்கக் கூடாது என சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதற்கு எதிராக விஷயத்தைக் கொட்டி வருபவள்.

5. இன்னும் பல அடுக்கலாம். இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.இப்படிப் பட்ட மனம் நிறைய நஞ்சுடன் வலம் வரும் இந்தப் பார்ப்பன வெறிப்பிடித்தவளுடன் தான், இணைந்திருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படும் எனச் சகோதரர்களிடமிருந்துப் பிரிந்து வந்த ஏகத்துவத்தின் காவலர்களான ததஜ, 'ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு தருவேன்' என்ற வாக்குறுதியைப் பேணாத(மெரீனா மாநாட்டில் இவள் தந்த வாக்குறுதியும் பின்னர் அவ்வாறுதரவேயில்லை எனக் கூறியதையும் நினைவில் கொள்ளவும்) இந்த நயவஞ்சகியுடன் சமரசம் செய்துக் கொண்டு கூட்டணி வைத்துக் கொண்டது

(இவ்விடம் முஃமின் ஒரு பொந்தில் ஒரு முறையே கொட்டு கொள்வான் என்ற நபிமொழியையும் நாம் நினைவில் நிறுத்துவோம்.

மேலும் தமுமுகவுடன் இருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு இடையூறு வரும், பாப்பாத்தி ஜெயலலிதாவுடன் இருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்குப்பாதுகாப்பு கிடைக்குமோ - மத மாற்றத் தடைச் சட்டம் நினைவுக்கு வரவேண்டும்)

இனி இவர்கள் மத்தியில் உள்ள முக்கியமான ஓர் ஒற்றுமை

திராவிடக் காவலன் கருணாநிதி, அண்ணா திராவிட பாப்பாத்தி ஜெயலலிதா இந்த இரு நயவஞ்சகக் கில்லாடிகளுமே முஸ்லிம்கள் அல்ல - யதார்த்தப் படைப்பாளனுக்கு எதிரிகள்.உண்மையாக நினைத்துப் பார்த்தால் உடம்பு புல்லரிக்கவெ செய்கிறது - நமது சமுதாயக் காவலர்களாக அடையாளம் காட்டி வரும் ததஜ மற்றும் தமுமுக தலைவர்கள் தங்களுக்கிடையில் ஒன்றுமில்லா உலக விஷயங்களுக்காகப் பிரிந்து நின்றுக் கொண்டு, இந்த நயவஞ்சகக் கூட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான நியாயங்களாகச் சப்பைக் கட்டுகளைக் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து!ததஜ, தமுமுக தலைவர்களே திருந்துங்கள்! அல்லது நிச்சயம் வல்ல இறைவனால் திருத்தியமைக்கப்படுவீர்கள்!சமுதாயத் தலைவர்களே! செல்லுமிடமெல்லாம் கேள்வி, பதில் பகுதி வைத்து அதிலும் அரசியல் விளையாட்டு நடத்தும் உங்களிடம் இந்த எளியோனின் ஓர் சிறு கேள்வி:

இறைவனின் எதிரிகளுடன் கூட்டணி வைக்கவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் உங்களுக்குக் கிடைத்தக் காரணங்களில் ஒன்று கூடவா உங்கள் சகோதர இயக்கங்களுடன் ஒருங்கிணைந்துச் செல்வதற்கும் அவர்களுடன் ஓரிடத்தில் அமர்ந்துச் சமுதாயப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் குறித்து அலசுவதற்கும் கிடைக்கவில்லை?இதற்கான பதில் நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். இல்லையெனில் இக்கேள்வி உங்களை மறுமை வரை விரட்டிக் கொண்டே இருக்கும்.

தீர்வு:

1. தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய இந்த இரு அணிகளுமே தங்களுக்கிடையில் ஒரே கருத்துள்ள சில விஷயங்களிலாவது ஒன்றிணைந்துச் செயல்படலாம் என ஓர் குறைந்தப் பட்ச ஒப்பந்தம் செய்து கொள்வது.

2. எக்காரணம் கொண்டும் சகோதரர்கள் இழிவு படும் விதமாகப் பொது இடங்களில் அவர்களின் குறைகளைப் பேசுவதில்லை என உறுதி எடுத்துக் கொள்வது(ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்குப் பாதுகாவலனாவான். அவனின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட அவன் எவ்வகையிலும் காரணமாக இருக்க மாட்டான்)

3. தங்களுக்குள் ஏற்பட்ட குறைந்தப் பட்ச விஷயங்களில் உள்ள உடன்படிக்கையினை எடுத்துக் கொண்டு மற்றைய ஜாக், மனித நீதி பாசறை, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக், ஜமாஅத்துல் உலமா என அனைத்து அமைப்புகளையும் ஒவ்வொன்றாக சமீபித்து அவ்விஷயங்களில் ஒருங்கிணைந்துச் செயல்பட வருமாறு அவர்களுக்கும் ஒற்றுமைக்கான அழைப்பு விடுத்தல்.தற்பொழுதைக்கு இவ்வளவு போதும்.

ஒரு சிறு ஆரம்பம் மட்டுமே நம்மிடமிருந்து வேண்டும்.அதாவது மனதார ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம். அதன் அடிப்படையிலான முன் முயற்சி. இதனை மட்டும் செய்ய ஆரம்பித்து விட்டால் பின்னர் உள்ள வழிகள் ஒவ்வொன்றையும் வல்ல இறைவன் அழகாக அமைத்துத் தந்து விடுவான் இன்ஷா அல்லாஹ்!நாம் ஒரு அடி நகர்ந்தால் இறைவன் இரு அடிகளும் நாம் நடந்தால் இறைவன் ஓடியும் நாம் ஓடினால் இறைவன் நமது கைகளாகவும் கால்களாவுமே மாறி விடுவான் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம்.இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி முன் எடுத்து வைப்பதை மட்டுமே.அதனை எடுத்து வைக்க முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுவதாக உரிமைகோரும் தமுமுகாவோ அல்லது ஏகத்துவத்தின் காவலர்களாகத் தங்களை அடையாளம் காட்டும் ததஜாவோ, யார் முதலில் முதல் அடியை எடுத்து வைக்கின்றீர்களோ அவர்களுக்கு இறைவனின் முழு அருளும் இரு உலகிலும் காத்திருக்கின்றது என்பதை மறவாதீர்கள்.

நன்றி : இறை நேசன்

Thursday, September 11, 2008

தினமலர் இணையதளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை!

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கார்ட்டூனை வெளியிட்டு தனது இஸ்லாமிய விரோதக் கொள்கையை நிரூபித்த தினமலர், இஸ்லாமியர்களின் கடும் கோபத்தையும், கண்டனத்தையும் பெற்றதை அறிவோம். அதன் தொடர்ச்சியாக அமீரகத்தில் தினமலர் இணையதளத்தைத் தடை செய்யக்கோரி ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல் விண்ணப்பங்கள் அரசாங்கத்திற்கு வந்ததன் விளைவாக இன்று முதல் தினமலர் இணையதளத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது!

Wednesday, September 10, 2008

மாபெரும் இஸ்லாமிய அறிவுப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவர்களும் இதில் கலந்து சிறப்பித்து, பரிசுகளை அள்ளிச் செல்லுமாறுஅன்புடன் அழைக்கிறோம். உங்களது குழந்தைகளை அனுப்பி, இஸ்லாமிய அறிவுத் திறனை வளர்க்குமாறு கேட்கிறோம்.

அன்புடன்,
தாருல்ஸஃபா சாதிக்.

http://www.darulsafa.com/

Tuesday, September 9, 2008

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளர்

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி 12 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்று வந்த இப்போட்டிகள் இவ்வாண்டு மம்சார் பகுதியில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்க அரங்கில் நடைபெற்று வருகிறது.
திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளரான கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டி நாட்டைச் சேர்ந்த பதினான்கு வயது நிரம்பிய நியாந்வி மஜலிவா கூறுவதைக் கேளுங்கள் இதோ :
தனது நாடான புருண்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கே ருவாண்டாவும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் டான்ஸானியாவும், மேற்குப் பகுதியில் காங்கோ நாடும் உள்ளன.
எனது தாயாரின் அறிவுரைப்படி திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கினேன்.பத்து வயதான போது திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கிய நான் 2007 ஆம் ஆண்டு நிறைவு செய்தேன்.
அரபி மொழி ஆசிரியரின் உதவியுடன் அரபி மொழி ஓதக் கற்றுக்கொண்ட நான், தனது தாயாரின் உந்துதலின் காரணமாகவே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என்கிறார்.
தனது தகப்பனார் ஒரு சிறிய வணிகர் என்றும், காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பள்ளி செல்லும் வரையிலும், பின்னர் பள்ளி விட்டு வந்த பின்னர் சூரியன் மறையும் வரையிலும் நான் திருக்குர்ஆன் மனனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இதற்காக எனது ஊரில் மிகச் சிறப்பாக கௌரவப்படுத்தப்பட்டேன்.
தனது ஊரில் 62 சதவீதம் பேர் ரோமன் கத்தோலிக்கர் எனவும்,8 முதல் 10 சதவீதம் பேரே முஸ்லிம்கள் என்றார். மீதமுள்ளவர்கள் கிறிஸ்துவத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்தோராவர்.
உள்நாட்டுப் போரின் காரணமாக தனது நாடு போதிய வளர்ச்சியடையவில்லை என்கிறார் நியாந்வி. தனது நாடு உலகிலுள்ள பத்து ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

- MUDUVAI IDHAYATH

http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10243869.html

Sunday, September 7, 2008

பனைக்குளத்தில் ரம்ஜானை முன்னிட்டு குரான் ஓதும் போட்டி

10 நாட்கள் நடைபெறுகிறது

ரம்ஜானை முன்னிட்டு பனைக்குளத்தில் திருக் குரான் ஓதும் போட்டி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
குரான் ஓதும் போட்டி
மண்டபம் ïனியன் பனைக் குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்குரான் ஓதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி நேற்று நத்தர் ஒலியுல்லாஹ் தர்கா வளாகத்தில் தொடங் கியது.
விழாவுக்கு பனைக்குளம் ஜ×ம்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். முஸ் லிம் பரிபாலன சபை செயலா ளர் வக்கீல் அர்சத் உசேன், நிர்வாக சபை செயலாளர் அகமது கமால், ஊராட்சி தலைவர் சலாமுல் அன்சார், ஐக்கிய முஸ்லிம் சங்க செய லாளர் காதர் மைதீன், வாலிப முஸ்லிம் சங்க செய லாளர் ரசீது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
270 பேர்
விழாவில் பெருங்குளம் தலைமை இமாம் சாகுல் ஹமீது ஆலிம், ரியாஸ்கான், ஆற்றாங்கரை தஸ்தகீர், ஐக் கிய ஜமாத் நிர்வாகிகள், வாழுர், சித்தார்கோட்டை, அத்திïத்து, புதுவலசை, அழகன்குளம், ஆற்றாங்கரை, பெருங்குளம் பகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருக்குரான் ஓதும் போட்டியில் 270க்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரி சுகள் மற்றும் ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்படும்.

கேலிச்சித்திரமும் - நமது அணுகுமுறையும்:


தினமலர் ஏட்டில் வெளியான கேலிச்சித்திரத்தின் பாதிப்புக்களை – முஸ்லிம்களின் கொந்தளிப்பையும், போராட்டத்தையும் கண்டு வருகின்றோம்.

ஓர் முஸ்லிம் தன் உயிரினும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றான்.
அது அவனது நம்பிக்கையின் அடையாளங்களில் ஒன்று.
அந்த நம்பிக்கை புண்படுத்தப்படும் போது மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

ஒர் உண்மையை கேலிச்சித்திரத்தை வெளியிட்டவரும், அந்த பத்திரிக்கை ஆசிரியர்களும் நன்கு உணர வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முழு உலகுக்கே வழிகாட்டியாக வந்தவர் என்ற செய்திதான் அது.

அத்.21 – வ.எண்:107. இறைவன் கூறுகின்றான் “'நபியே! உம்மை நாம் உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பி உள்ளோம்".

எனவே ஒர் குறிப்பிட்ட நாட்டுக்கு, சமூகத்துக்கு என்று இல்லாமல், முழு உலகுக்கும் வழிகாட்டியாக, நன்னெறியை போதிப்பவராக, தீய நெறிகளை தடுப்பவராக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியமான – கடமையான ஒன்றுதான். அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

சாத்தியமான, ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வது மிகவும் பயன் தரக்கூடியது.
நீண்ட கால அடிப்படையில் உதவக்கூடியது.
மனமாச்சர்யங்களை வளர்க்காமல், மன இணக்கத்தை– மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த பெரிதும் துனை புரிய வல்லது.

இத்துடன் நின்று விடாமல், சில ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை நாம் பேண வேண்டும்.

I. ஆக்கபூர்வமான அணுகுமுறைகள்:

1. சட்டத்தின் மூலமாக பிரச்சனையை சந்திப்பது.
2. ஊடகங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்வதுடன், போதிய விளக்கங்களை தருவது.
3. அமைதி வழியில் போராட்டம் நடத்துவது.
4. சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திந்து நமது கருத்துக்களை தெரிவிப்பது – கண்டனத்தை நேரில் சமர்ப்பிப்பது.
5. அரசுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றினைந்து குரல் கொடுப்பது.
6. இது போன்ற சூழல்களிலாவது சமுதாயம் ஓர் அணியில் திரள்வது –நமது எதிர்ப்பை ஒருமுகப்படுத்துவது அவசியம்.

II. அழைப்பாளனாக நாம் செய்ய வேண்டியது என்ன?

1. குறைந்த பட்சம் ஒர் நபர், ஐந்து முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நபி வழியையும்,
இஸ்லாத்தையும் எடுத்துக் கூற, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.

2. முழு மனித சமூகத்துக்கும் நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்து நல்வழிப் படுத்துபவராகவும்தான் நபி(ஸல்) அனுப்பப்பட்டுள்ளார்கள். (34:28)
என்ற இறைச் செய்தியை எல்லோருக்கும் பரப்ப வேண்டும்.

3. “நபிகள் நாயகம், உலக மக்களுக்கு ஒர் அருட்கொடை” என்ற (21:107) இறை வாக்கையும், மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.

4. நபி(ஸல்) வாழ்வில் ஓர் துறைக்கு மட்டும் என்றில்லாமல் - சகலத் துறைகளுக்கும் வழிகாட்டியாக,
பேச்சளவில் மட்டும் அல்லாமல் - நடந்து காட்டிய – செயல்படுத்தி வெற்றி கண்ட,
ஓர் அழகிய முன்மாதிரி என்பதை யாவருக்கும் புரிய வைக்க வேண்டும்.

III – நபிகள் நாயகமும் - நமது வாழ்க்கையும்:

1. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் புரிந்து நமது வாழ்வில் வாய்மையுடன் பின்பற்றுதல் வேண்டும்.
நபியின் மீது நாம் கொண்டுள்ள நேசம், நமது தினமலர் பத்திரிக்கைக்கு எதிரான‌ எதிர்ப்பில் காட்டப்படுவதுடன் நில்லாமல்,
- முழு வாழ்விலும், அண்ணலாரை வழிகாட்டியாக ஏற்று நடக்க வேண்டும்.
2. எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளுக்கு, இறை வழிகாட்டலை, நபி வழியை மூல ஆதரமாக எடுத்து நடக்க வேண்டும்.
3. நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், வழிகாட்டல் தவிர வேறு யாருடைய பேச்சையும் சத்தியத்துக்கு அளவுகோலாக கொள்ளக் கூடாது.
4. நமது குடும்பத்து உறுப்பினர்களிடம், நண்பர்களிடம் சொந்த பந்தங்களிடம் அண்ணலார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் போதிக்க வேண்டும்.
5. நபி (ஸல்) அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பு மற்றும் நேசம், அனைத்து நேசங்களை விடவும் மோலோங்கி இருக்க வேண்டும்.
6. ஆர்பாட்டத்துடன் தேவை ---- கல்வி, பொறுமை, தூர நோக்கு, அழைப்புப்பணி, சொல்லில்-செயலில் நபி வாழ்க்கை.

ஆம். நபி வழியில் நமது வாழ்க்கை, காலத்தின் கட்டாயமும், நமது ஈருலக வெற்றிக்கான உத்திரவாதமும்.

அன்புடன்
இறைவழி சகோதரர்கள்