Thursday, June 12, 2008

தமுமுக மற்றும் எய்ம்ஸ் டிரஸ்ட் இணைந்து மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தமுமுக மற்றும் எய்ம்ஸ் டிரஸ்ட் இணைந்து மார்க்க விளக்க பொதுக்கூட்டம் கடந்த 28-05-2008 அன்று இளையான்குடி'யில் நடந்தது, இதில் தமுமுக தலைமை நிலைய பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் " நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம் முன் மாதிரி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,கூட்டத்திற்கு நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்,
மேலும் செய்திகளுக்கு... http://www.ilayangudi.org/ily/news.php?extend.997.1

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு பெற்று தந்து சாதனை

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு பெற்று தந்து சாதனை
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு மிகவும் சிறப்பாக செயல்பட்டு கடந்த வருடம் 100 சதவீதம் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இந்த வருடம் வேலைவாய்ப்பு பிரிவு மூலமாக பல்வேறு தினங்களுக்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 334 பேர் 35 வெவ்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வு மூலம் பெங்களூரை சேர்ந்த பி.பி.எல் ஹைதராபாத்தை சேர்ந்த ஆசியா இன்ஜினியரிங் நிறுவனங்களில் சுமார் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு வேலைவாய்ப்பு பிரிவு அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தந்து சிறந்த சேவை செய்து வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் மன்னார் வளைகுடா உயிர்கோள் சார்பாக அறக்கட்டளை நிதி உதவியுடன் ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சி மேற்கொண்ட 45 பெண்களில் 36 பெண்கள் திருச்சி புத்தனாம்பட்டியில் உள்ள எம்.என்.சி நிறுவனமான லாயாசன் இந்திய நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஓராண்டு ஏ.சி பயின்ற மாணவர்கள் சென்னையில் பிரபல நிறுவனங்களில் டெக்னீசியனாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.
மின்சேமிப்பு உபகரணங்கள் அறிமுகப்படுத்த அமுல்படுத்திடும் புதிய தொழில் நுட்பத்தில் எலக்ட்ரிக்கல் பயின்ற பயிற்சியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலாக்க அலகு மூலம் 6 மாத காலம் வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது ஞிக்கும் பயிற்சி மேற்கொண்ட இளைஞர்கள் 25 நபர்களும் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.
This post was submitted by
முதுவை ஹிதாயத்.

10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்

10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்
தமிழகத்தில் 10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் ஜனநாயக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிற்கு வருகை தந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப்பிற்கு மாவட்டத் தலைவர் கோபிகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு மாநிலத் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது
தமிழ்நாட்டில் அண்ணா பிறந்த நாள் செப்.15ம் தேதியில் கைதிகளின் தண்டனை நாளைக் குறைத்து விடுதலை செய்வது போல் 10 ஆண்டுகளுக்கு மேல்சிறையில் உள்ள 54 முஸ்லீம்களை இந்து மத விரோதிகள் என சித்தரிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக அரசு முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம். தலித் மக்களுக்கு 18 சதவீதத்தில் 10 சதவீதம் நிரப்ப வேண்டும். சச்சார் கமிட்டியை உடனே அமல்படுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு சமூக அரசியலில் முன்னேற மத்திய அரசு வாய்ப்பளிக்க வில்லை. எனவே காங்கிரஸை புறக்கணிக்க முஸ்லீம்கள் தயாராக உள்ளார்கள். சென்னையில் அப்பாவி 3 பேர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று முத்திரையிடப் பட்டுள்ளதை கண்டிக்கிறோம் என்று கூறினார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் வேங்கை சந்திரசேகரன், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், கொள்கை பரப்புச்செயலாளர் ஷாஜகான், அமைப்புச்செயலாளர் வீரர் அப்துல்லா, தேனி மாவட்டச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்
தமிழகத்தில் 10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் ஜனநாயக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிற்கு வருகை தந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப்பிற்கு மாவட்டத் தலைவர் கோபிகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு மாநிலத் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது
தமிழ்நாட்டில் அண்ணா பிறந்த நாள் செப்.15ம் தேதியில் கைதிகளின் தண்டனை நாளைக் குறைத்து விடுதலை செய்வது போல் 10 ஆண்டுகளுக்கு மேல்சிறையில் உள்ள 54 முஸ்லீம்களை இந்து மத விரோதிகள் என சித்தரிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக அரசு முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம். தலித் மக்களுக்கு 18 சதவீதத்தில் 10 சதவீதம் நிரப்ப வேண்டும். சச்சார் கமிட்டியை உடனே அமல்படுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு சமூக அரசியலில் முன்னேற மத்திய அரசு வாய்ப்பளிக்க வில்லை. எனவே காங்கிரஸை புறக்கணிக்க முஸ்லீம்கள் தயாராக உள்ளார்கள். சென்னையில் அப்பாவி 3 பேர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று முத்திரையிடப் பட்டுள்ளதை கண்டிக்கிறோம் என்று கூறினார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் வேங்கை சந்திரசேகரன், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், கொள்கை பரப்புச்செயலாளர் ஷாஜகான், அமைப்புச்செயலாளர் வீரர் அப்துல்லா, தேனி மாவட்டச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Wednesday, June 11, 2008

ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அரியமங்கலம் கிளையின் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியமங்கலம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்டச் செயலர் ஏ. அப்துல் ரஹிம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.

இம்முகாமில் 20-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். 200-க்கும் மேற்பட்டோர் ரத்த வகையைக் கண்டறிந்தனர்.

தமுமுக நிர்வாகிகள் எஸ். இப்ராஹிம்ஷா, எம். முகமது ராஜா, அரியமங்கலம் கிளைச் செயலர் கே. தமீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

This post was submitted by முதுவை ஹிதாயத்.

Monday, June 9, 2008

புதிய பாடத்திட்டம் அறிமுகம்

தோப்புத்துறை பெண்கள் அரபிக் கல்லூரியில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் தகவல் : அமீரக கிளை - மர்கஸ்