Friday, October 24, 2008

ஹஜ் செய்திக் குறிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளுக்கு பயிற்சி நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2008-ம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த புனித பயணிகளுக்கு சென்னையில் புத்தறிவுப் பயிற்சி முகாம் நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கருதியுள்ளது. இந்த பயிற்சியின் போது சவூதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழிமுறைகள், ஹஜ் குழு மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் இதர ஏற்பாடுகள் மற்றும் தகவல்கள் பற்றி விரிவாக விளக்கி கூறப்படும். இந்த பயிற்சி முகாம், தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டியின் உதவியுடன் நடத்தப்படுகிறது. 27-ந் தேதி (தமிழ்) மற்றும் 28-ந் தேதி (உருது) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பைத்துல் ஹுஜ்ஜாஜ், (ஹஜ் ஹவுஸ்), எண்.2, டிமெல்லோஸ் ரோடு, சூளை, சென்னை-600112 என்ற முகவரியில் நடைபெறும்.இப்பயிற்சி முகாம்களில், பெண் புனித பயணிகள் உட்பட அனைத்து ஹஜ் பயணிகளும் (தேர்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள்) கலந்து கொள்ளுமாறும், அதன்மூலம் ஹஜ் பயணத்திற்கான விதிமுறைகள், வழிவகைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக தெரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பன்னாட்டு பாஸ்போர்ட்டில் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களும் விரும்பினால் இப்புத்தறிவு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாம்களை நடத்துவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை மாநில ஹஜ் குழு அனுப்பி வைக்க உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா நிறைவேற்றுவது பற்றிய விளக்கங்களை ஆலிம்கள் அளிப்பார்கள்.இது குறித்து மேலும் விவரங்களை அறிய தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவை 044-28252519 மற்றும் 044-28227617 ஆகிய தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to source:http://www.thatstamil.com/

Monday, October 20, 2008

கோவையில் தழிழக சிறைகளில் 11 ஆண்டுகளாக இருக்கும் குணங்குடிஹனிபா உட்பட மற்ற சிறைவாசிகளை விடுதலை
செய்ய முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்!
கோவை,அக், 19- தமிழகசிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி, அவர்களது குடும்பத்தினர் கண்களில் கருப்புத்துணி
கட்டி,கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்திற்க்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமை வகித்தார்.துனணத்தலைவர்
அபுதாஹிர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சிறைகளில் 11 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை,பாரபாட்சம் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும்.
விசாரனை கைதிகளாக சிறையில் உள்ள குணங்குடி ஹனிபா உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும்.
14 ஆண்டுகளாக சிறையில் மன நோயாளியாக அடைக்கப்பட்டிருக்கும் ஹைதர்அலியை ம்னதாபிமானதடதோடு தம்ழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
கோவை தனி நீதிமன்றத்தில் 13 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள்,தண்டனை காலத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்டனர்: நியாயமாக இவாகளுக்கு
வழங்க வேண்டிய ஜாமீனை வழங்காமல் அரசு மறுப்பு தெரிவிக்கிறது:இவர்களுக்கு ஜாமின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தால்,ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கலாம்: ஆனால்,10 ஆண்டுகள்முடித்தும்,
முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் மறுக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், விரைவில் சென்னையில் தமிழக முதல்வர் விட்டு முன்பு சிறைவாசி குடும்பங்கள் எல்லோரும் முற்றுகையிடுவோம்
என,ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தி- கோவை தங்கப்பா

ஹோட்டலில் சென்று சாப்பிடும் மக்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடியில் காகங்களை வேட்டையாடி, காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி போடும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்த அக்கா தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் சிலர் காகங்களை வேட்டையாடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியை கண்காணித்தனர்.

இந்நிலையில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்த ஒரு பெண்ணும் வாலிபரும் ஏதையோ காகங்களுக்கு தூவினர். நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் அவற்றை கொத்தித் தின்றன. சிறிது நேரத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தன.

மயங்கிய காகங்களை எடுத்து சாக்கு மூட்டையில் வைத்து கட்டினர். இதை பார்த்த போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்த்னர். அவர்கள் இருவரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராதா, அவரது தம்பி முனியாண்டி என்பது தெரியவந்தது.

விசாரணையில், இருவரும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் தங்கி வருகின்றனர். கோழி, காடை, கௌதாரி போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் காகங்களை பிடித்து தரும்படி சில ஹோட்டல் உரிமையாளர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து தெர்மல் நகர் கடற்கரையில் கோழி தீவனத்தில் மரு்நது கலந்து காகங்களை வேட்டையாடியுள்ளனர். பின்னர் தோலை உரித்து இறைச்சியாக்கி தூத்துக்குடி, ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்துள்ளனர்.

ஹோட்டல்களிலும் மசாலா தடவி காடை, கௌதாரி என்று கூறி காக்கா பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹோட்டல்களில் இருந்து இவர்களுக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களின் உற்வினர்களும் பல இடங்களில் காகங்களை வேட்டையாடி காடை, கௌதாரி என்று கூறி விற்று வருவதாகவும் கூறினர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ரன் என்ற திரைப்படத்தில் விவேக் தனது காமெடியில் காக்கா பிரியாணி பற்றி கூறியபோது வயிறு புடைக்க் சிரித்திருப்போம். ஆனால் அது நிஜம் என்று இப்போது தெரிய வந்துள்ளது.