Saturday, June 7, 2008

முத்துப்பேட்டையில் கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி !

முத்துப்பேட்டையில் கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி !
ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாடு !!
முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் அரசுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கொய்யா மஹாலில் 07.06.2008 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை நகரைச் சேர்ந்த மாணவர்களில் பிளஸ் டூ தேர்வில் 900 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும், பத்தாம் வகுப்புத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.

இதுபோன்ற கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடத்தப்பட்டு சமுதாய மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.

கோவையில் அவசர ஊர்தி அர்ப்பணிப்பு

Wednesday, June 4, 2008

நாகூரில் பதட்டம் - கந்துரியை எதிர்த்து ஆர்பாட்டம்


நாகூரில் வருடந்தோறும் கந்தூரி விழா நடந்து வருகிறது, இந்த விழாவில் பலவித மான அனச்சரங்களும், இஸ்லாத்திற்கு முரணான சடங்கு களும் நடந்தேறி வருகிறது, இதை கண்டிக்கும் வகையில் நேற்று சில அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது இதனால் அங்கு பதட்டம் நிலை ஏற்பட்டுள்ளது,

தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று இப்படிப்பட்ட தர்காக்கள் இல்லாத ஊர்கள் பாவம் செய்த ஊர்களாகக் கருதப்படுகின்ற அளவுக்கு இந்த தர்கா மோகம் பெருத்துக் கொண்டே போகிறது. மக்களில் மிகப் பெரும்பாலோரின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. சாதாரணமாகப் படம் பார்க்க, பொழுது போக்க என்று வெளியே சுற்ற முடியாத கட்டுப்பாடுகள் இருக்கும் பெண்கள் கூட இந்த பாவா, சந்தூரி, கொடியேற்றத்தின் பெயாகளால் சுலபமாக இரவு நேரங்களில் வெளியே சென்று வர நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டிருக்கின்றன.

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரை அரூஸிய்யா தைக்கா அரபு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அரபு கல்லூரி

கீழக்கரையில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு 1671-ம் ஆண்டு மேலத்தெருவில் இஸ் லாமிய மார்க்க மகான் சதக் கத்துல்லா அப்பா என்பவ ரால் அரபு கல்லூரி தொடங் கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அல்மதரசத்துல் அரூஸிய்யா தைக்கா அரபிகல்லூரி என்று பெயர்.

இங்கு அரபு மொழி கல்வி கற்கும் ஆலிம், உலமாக்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த கல் லூரியை தைக்கா சாகிபு ஒலியுல்லா மற்றும் மார்க்க மாமேதை செய்யது முகமது மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆகியோரின் வாரிசு கள் நிர்வகித்து வருகின்ற னர்.

பட்டமளிப்பு விழா

இந்த கல்லூரியின் மவுலவி ஆலிம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்டி அல்ஹாஜ் டி.எம்.அகமது அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். சென்னை சுலைமான் அறக் கட் டளை தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் முன்னிலை வகித்தார். அல்மதரஸத்துல் அரூஸிய்யா தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் கே.டி.எம். அகமது முஸ்தபா வரவேற்று பேசினார். டிரஸ்டி டி.எஸ்.ஏ.ஹமீது அப்துல் காதிர் அறிமுக உரையாற்றி னார்.கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வாசல் கத்தீபு எம்.அஜ்மத் உசேன் ஆலீம் தொடக்க உரையாற்றினார். காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.கலந் தர் மஸ்தான் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசி னார்.

விழாவில், கல்லூரி மேனே ஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக் டர்.தைக்கா சுஐபு அலீம் கலந்து கொண்டு மாண வர்களுக்கு மவுலானா மவு லவி பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் தைக்கா அகமது ஷாகீர், கீழக் கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.ரபீக் அகமது, அல்மதரசத்துல் அரூ ஸிய்யா தைக்கா பேராசிரி யர்கள் கே.ஏ.முகைதீன் அப் துல் காதர், எச்.முகைதீன் அப்துல்காதர், எம்.ஐ.முகமது சுல்தான், எஸ்.எஸ்.சலாஹூ தீன் ரிபாயி ஆகியோர் வாழ்த்தி பேசினர். டிரஸ்டி, அல்ஹாஜ் தைக்கா முகமது அஷரப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

விழாவில் சீதக்காதி அறக் கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனங்களின் நிர்வாகி ஷாக் கிர், உஸ்வத்துன் ஹசனா சங்க செயலாளர்எம்.கே.எம்.அசன் தம்பி, கே.வி.எம்.கïம், இஸ் லாமி பைத்துல்மால் -குத்பா கமிட்டி செயலாளர் மைதீன் தம்பி, டாக்டர்.செய்யது அப் துல்காதர், என்.டி.எம்.அகமது பாரூக், சா.கி.மு.ஹபீபு முக மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஹமீது சுல்த்தான் ஆலிம் அரூஸி உள்பட பல ருக்கு மவுலானா மவுலவி பட்டங்களும் மற்றும் அவர் கள் படித்த கல்வி படிப்புக் கான பட்டங்களும் வழங்கப் பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் சலாகுதீன் ஆலிம் நன்றி கூறினார். கீழக்கரை மேலத்தெரு பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் எஸ்.ஏ.முக மது ஆரிப் ஆலிம் துஆ ஓதி னார்.

This post was submitted by முதுவை ஹிதாயத்.

Tuesday, June 3, 2008

மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம

மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் மேத்தமார்பாளையம் எம்.ஆர்.பி. மருத்துவ சேவை அறக்கட்டளை மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தின.

இதில், உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர்அலி பிஸ்பாஹி, வி.டி.எஸ்.ஏ. அப்துல் ஹமீது, வாவர் பள்ளித் தலைவர் எம். சாகுல் அமீது, துணைத் தலைவர் எஸ். பீர்முகமது கலந்து கொண்டனர்.

முகாமில் கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை எம்.ஆர்.பி. மருத்துவ சேவை அறக்கட்டளைத் தலைவர் டி.எம்.கே. ஜமால், செயலர் எம்.பி. நியாஸ், பொருளாளர் எச். எம். இஸ்மாயில்கனிசெய்திருந்தனர்.

This post was submitted by முதுவை ஹிதாயத்.