Saturday, July 5, 2008

தோப்புத்துறை'யில் வரதட்சனை எதிர்ப்பு திருமணம்

ல்லாஹ் நாடினால்...
நாகை மாவட்டம் தோப்புத்துறை'யில் வருகின்ற 13 ஆம் தேதி (SUNDAY) காலை என்னுடைய திருமணம் ( வரதச்சனை எதிர்ப்பு திருமணம்) நடைபெற உள்ளது, இத் திருமணம் உள்ளூர் தவ்ஹித் ஜமாஅத் ( JAQH )தலைமையில் நடைபெற உள்ளது, சிறப்பு பேச்சாளர்களும் வருகை தர உள்ளார்கள், மேலும் நான் 1999 ஆண்டுகளில் ஜமாஅத் மன்றத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது, இனிதே நடைபெற இறைவனிடம்
பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் .... ஆதம். ஆரிபின்



இலவச நோட்டு புத்தகங்கள்-சீருடைகள்

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நேற்று (29-06-2008) நடைபெற்ற விழாவானது திருவிழா போன்று காட்சியளித்தது.
இலவச நோட்டு புத்தகங்கள்-சீருடைகள் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு வழங்கினாலும் மாணவ-மாணவியரின் ஆர்வ மிகுதியால் கூட்ட நெரிசலில் முட்டி மோதினர். இவற்றை விநியோகிப்பதற்காக கிரஸண்ட் சங்க (CWO) , கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் நியமிக்கப்பட்டு 750 மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

நன்றி : ஐக்கிய தவ்ஹித் ஜமாஅத் ப்லோக்

மதுக்கூரில் போதை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

மத்திய அரசின் களவிளம்பரத் துறை, மதுக்கூர் டிரேடா தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச போதை எதிர்ப்பு தின சிறப்பு நிகழ்ச்சி மதுக்கூரில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதுக்கூர் பள்ளித் தலைமையாசிரியர் சாந்தகுமாரி தலைமை வகித்தார். களவிளம்பரத் துறை அலுவலர் ஆ. இளங்கோவன், தொண்டு நிறுவன இயக்குநர் விக்டோரியா மேரி, உதவித் தலைமையாசிரியர்கள் கண்ணன், செல்லத்துரை, லட்சுமணன், அழகர், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.

Wednesday, July 2, 2008

அதிரம்பட்டினத்தில் படிப்பகம் திறப்பு

வரும் 5.7.2008 அன்று அதிரை செக்கடிமேட்டில் நடைப்பெற இருக்கிறது இதனைமுன்னிட்டு அன்று காலை 9 மணிமுதல் தஞ்சை இரத்த வங்கியுடன் இணைந்துமாபெரும் இரத்த தான முகாம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான ஏற்பாடுகளை தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பக இளைஞர்கள் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்இரத்தம் கொடுத்து இன்னுயிர்க்காக அனைவரும் முன் வருமாறு அழைக்கப்படுகிறார்கள்
அதிரையில் 24மணிநேரமும் இரத்தம் தேவைபடுவோர் எங்களை அனுகவும்
சரஃபுதீன் 9944450965, B.அஸ்ரஃப் 9976438566, அனஸ்9790282278 முகம்மத்9894848745 , தாரிக்9894988713 ,
Source : Adirai எக்ஸ்பிரஸ்


Tuesday, July 1, 2008

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அழைப்பு

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் சந்திரசேகரன் செய்திக்குறிப்பு: ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு சேர்க்கை கட்டணம் செலுத்திய தொகை அல்லது அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ.500 மற்றும் கல்விக்கட்டணம் செலுத்திய தொகை அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு ரூ.350 வழங்கப்படும்.
பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்காமல் பயில்பவர்களுக்கு ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை மாதந்தோறும் 100ம், விடுதியில் தங்கி 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.600 வீதம் பத்து மாதங்களுக்கு மட்டும் கணக்கிட்டு வழங்கப்படும். பள்ளிப் படிப்பிற்கான கல்வித்தொகை பெறுவதற்கு முந்தைய பள்ளி இறுதித் தேர் வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங் களை உரிய சான்றுகளுடன், பயிலும் பள்ளிகளில் ஜூலை 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப விபரங்களை பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பு வாரியாக பிரித்து, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு ஜூலை 15ம் தேதிக்குள் "சிடி'யில் பதிவு செய்து சமர்ப்பிக்கவேண்டும். கல்வி உதவித் தொகை (புதியது) விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Monday, June 30, 2008

ஷார்ஜாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

கடந்த வெள்ளி ( 26 - 06 - 2008 ) அன்று ஷார்ஜா பல்தீயா கேம்ப் -ல் -.மு.மு. சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு தோப்புத்துறை அபுல் ஹசன் தலைமை வகித்தார், தென்காசி மிஸ்பாஹுல் ஹுதாநத்வி அவர்கள் "ஷகாபாக்களின் தியாக வரலாறு" என்ற தலைமையில் சிறப்புரைஆற்றினார் , பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர், புளியங்குடிசித்திக் நன்றி உரையாற்றினார், மேலும் கூட்டத்தில் மாதம் தோறும் இது போன்று நிகழ்ச்சி க்கு ஏற்பாடு செய்ய முடிவு எடுக்க பட்டுள்ளது ,
மேலும்
விபரங்களுக்கு 050 8606498 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Sunday, June 29, 2008

இலவச பொது மருத்துவ முகாமில் சிகிச்சை

வேதாரண்யம்: வேதாரண்யம்-தோப்புத்துறை நாகை ரஸ்தாவில் முகம்மதியா பிளாக் தொகுப்பு வீடு திறப்பு விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் முகம்மதியா அறக்கட்டளை நிறுவனர் முகம்மது அலி தலைமையில் நடந்தது. முன்னாள் ஜமாத் தலைவர் உதுமானுல் ஆரீப் வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக தலைவர் ஜவாஹீருல்லா, மாநில செயலாளர்கள் அப்துல்சமது, தமீமுன் அன்சாரி, மாநில துணை செயலாளர் ஹாஜாக்கனி, ஜமாத் தலைவர் காசிம், நகராட்சி துணை தலைவர் சாகுல்ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். சென்னை பில்ரோத் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் இளையராஜா தலைமையிலான மருத்துவக்குழுவினர், 352 பேருக்கு சிகிச்சை வழங்கி இலவச மருந்துகளை வழங்கினர்.