திருப்பூர் கே.என்.பி காலணி கிளையின் சார்பாக 06.06.2008 அப்துல் கலாம் திடலில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு திருப்பூர் மாநகரத் தலைவர் ஹாலிதீன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பஷீர் அஹமது வரவேற்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள் பி.எம். இக்பால், ஏ. நாஸர், ஏ. அபுபைசல், ஆரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர உலமாக்கள் அணி செயலாளர் நாஸர் அலி திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார்.
முஸ்லிம்கள் கல்வி விழிப்புணர்ச்சி பற்றி மாநிலச் செயலாளர்
எம். தமிமுன் அன்சாரி சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் பி. அப்துஸ் சமது தமுமுகவினால் கிடைத்த நன்மைகள் என்கிற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமுமுகவின் அரசியல் எழுச்சி என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் ரூ. 80,000/- மதிப்பிலான கல்வி உதவி வழங்கப்பட்டது. இதனை மாவட்டத் தலைவர் ஏ. அப்துல் பஷீர், மாவட்டச் செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.