Tuesday, September 16, 2008

தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி

மலேசிய நண்பன் » செய்திகள்

Wednesday, 17 September 2008


அரசியல் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம் தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி

(எம்.ஏ.சலீம் பாவா
படம் : கி.குணசுந்தரி)
கோலாலம்பூர், செப். 16-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்(தமுமுக) முன்னணி செயல் வீரர்களில் ஒருவராக செயல்பட்டதன் வ௞ தமிழக மக்களால் பரவலாக அறி யப்பட்ட வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரும் தமுமுகவின் மாநிலச் செயலாளரும் ஑மக்கள் உரிமைஒ வார இத௞ன் ஆசிரியருமான தமீமூன் அன் சாரி சமீபத்தில் நண்பன் பணிமனைக்கு நல்லெண்ண வருகை மேற்கொண்டார். அவருடன் நடத்திய சந்திப்பிலிருந்து...

கே: தமுமுகவின் தற்போதைய செயல்பாடுகள் பற்றி...

ப: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பணிகள் 13 ஆண்டுகளை கடந்து 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த காலத்தில் நாங் கள் நடத்திய உரிமை போராட்டங்கள் மற்றும் சமூக நல்லிணக்க செயல்பாடு களால் தென்னிந்தியா மக்கள் அனைவ ராலும் அறியப்பட்ட ஒரு வலுவான சக்தியாக எங்களை உருவாக்கி இருக்கிறது.
தமிழக அரசாங்கத்தில் சிறுபான் மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு முதற்கட்டமாக 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித் துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வரலாற்றுபூர்வ வெற்றியாகும். இதன் விளைவாக எங்கள் இயக்கத் திற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தி யில் பன்மடங்கு ஆதரவு பெருகியுள்ளது. இந்த நிலையில் தான் எங்களது அடுத்த கட்ட முயற்சியாக தமுமுக சார்பாக ஒரு அரசியல் கட்சியை மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

கே: கடந்த ஆண்டு மலேசிய வருகை யின் போது தாங்கள் நண்ப னுக்கு வழங்கிய பேட்டியில் நேரடி அரசியல் பற்றி எந்த சிந்தனையு மில்லை என்றீர்கள்... ஆனால் தற் போதைய உங்கள் நிலையில் மாற்றம் தெரிகிறதே?

ப: நாங்கள் அரசியல் தளத்திற்கு செல்வதில் ஆர்வமில்லாத ஒரு இயக்க மாக இருக்கத்தான் முனைப்புக் காட்டி வருகிறோம். ஆனால், முஸ்லிம் சமுதாய மக்களின் பலமான நிர்பந்தத்தின் காரணமாக இஸ்லாமியர்களுக்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனை நாங்கள் விரும்பி போகவில்லை. சமுதாய மக்களின் நிர்பந்தத்தினால் இந்தப் புதிய முடிவை எடுத்துள்ளோம். அதேநேரம் தமுமுக ஒரு சமுதாய இயக்கமாக பொறுப்புடனும் வீரியத்து டனும் செயல்படும். தமுமுகவுடைய ஒரு அரசியல் பிரிவாக மட்டுமே புதிய கட்சி செயல்படும்.

கே: இஸ்லாமிய சமுதாயத்தை பிரதிநிதித்துதான் ஏற்கெனவே பல கட்சிகள் உள்ளனவே? புதிதாக நீங்கள் எதற்கு?

ப: கண்ணியமிக்க பெருந்தலைவர் காயிதேமில்லத் காலத்தில் தமிழகத்தில் 27 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப் பினர்களாக இடம்பெற்றிருந்தனர். ஆனால், இன்றைய நிலை என்ன? அப்துல் சமது, அப்துல் லத்தீப் ஆகியோரின் மறைவுக்கு பிறகு இஸ்லாமியர்களின் அரசியல் பலம் வெற்றிடமாக இருக்கிறது. முஸ்லிம்களின் அரசியல் கட்சிகள் பலமிழந்து அதனுடைய பிரதிநிதிகள் கூட சமூக மக்களின் குரலை பிரதிநிதிக்காமல் திமுக உறுப்பினர்களாக சட்டசபையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நம்முடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் தகுதி யான சமுதாய பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்து அனுப்ப வேண்டிய கடமையும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வலுவான சமுதாய இயக்கமாக இருக்கும் நாங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பா விட்டால் வேறு யாரும் அவ்விடத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது.
நாங்கள் பாதைகளை மாற்றிக் கொள்ளவில்லை. பயணத்தை விரைவு படுத்த புதியபுதிய வாகனங்களை பயன் படுத்துகிறோம். சமுதயாப் பணிகள் எவ் வளவு அவசியமோ அதே அளவுக்கும் அரசியல் பணியும் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம்.

கே: அரசியல் கட்சியாக உங் களது இலக்கு என்ன?

ப: நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று கூறவில்லை. அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது நாங்கள் தான் என்று சபதம் எதுவும் எடுக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் முஸ்லிம் சமுதாயத் தினர் 10 சதவிகிதம் இருக்கின்றனர். 25 சட்டமன்ற உறுப்பினர்களும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மேயர் பதவி ஆகியவையே எங்களது உச்சக்கட்ட இலக்கு. எங்களுடைய உயரத்துக்கேற்ப எங்களது எல்லைகளை வரையறுத்துள்ளோம். இந்த அளவுக்குள் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக் கையும் உறுதியும் எங்களிடம் உள்ளது.

கே: அரசியலில் வெற்றி பெற சமுதாய ஆதரவு மட்டும் போதுமா?

ப: நாங்கள் இஸ்லாமிய சமுதாயத்தை மட்டும் நம்பி அரசியலில் இறங்கவில்லை. தமிழகத்தில் எங்களைப் போன்ற மற் றொரு சிறுபான்மை இனமான கிறிஸ்து வர்கள் 10 சதவிகிதத்தினர் உள்ளனர். அவர் களின் ஆதரவும் எங்களுக்கு வலுவாக உள்ளது. அதுமட்டுமன்றி எங்களுடைய ரத்ததான சேவைகள், ஆம்புலன்ஸ் உதவிகள், கல்வி மற்றும் மனித நேய பணிகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக் கான மற்ற சமூக மக்களும் சகோதரர் களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

கே: தமுமுக என்ற இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிபோல் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும்?

ப: நாங்கள் அரசியல் களத்தில் இறங்க போதுமான வகையில் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம் அரசியலில் வெற்றி தோல்வி மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடிய சாரசரி அரசியல் இயக்கமாக இருக்க மாட்டோ ம். கொள்கைகளையும் லட்சி யங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படக்கூடிய நாங்கள் எத்தகைய நிலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு புயல் வேகத்தில் இயங்குவோம்.

கே: உங்களை ஒரு மதவாத கட்சி யாக முத்திரை குத்த வாய்ப்புள்ளதே?

ப: நாங்கள் சாதிய கட்சியோ மதவாத கட்சியோ இல்லை. சமூக நல்லிணக்கத்தைக் காப்போம் சம உரிமைகளைப் பெறுவோம் என்பதுதான் எங்களது குறிக்கோள்.
மதவெறி, சாதி வெறி, மொ௞ வெறி, இன வெறி போன்றவையெல்லாம் அரசி யலில் வ௞ப்பறியாக உள்ளது என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. இந்தத் தவறுகளைத் தீயிட்டு கொளுத்தி விட்டு நெறி தவறாத மனிதர்களை உருவாக்க நினைப்பதுதான் எங்களின் அரசியலில் சரியான பணியாக இருக்கும்.

கே: மக்கள் முன்னேற்றக் கழகத் தின் துவக்க விழா எப்போது?

ப: அரசியல் கட்சியை முறையாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அப்பணி நிறைவு பெற்றவுடன் சென்னை யில் மிகப் பிரமாண்டமான மாநாட்டைக் கூட்டி கட்சியின் தொடக்க விழாவை நடத் துவதற்கு முனைப்பு காட்டி வருகிறோம்.

கே: தனித்து போட்டியா அல்லது கூட்டணியா?

ப: கூட்டணி என்பது தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக அன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்.

கே: மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் பற்றி உங்களது கருத்து?

ப: மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் நிலை மிக கவலைக்குரிய தாக உள்ளது. மலாய் சமூதத்திற்கும் உள்ளேயும் நுழைய முடியாமல், இந்திய சமூகத்திற்குள்ளும் நிற்க முடியாமல் திசை தெரியாத கப்பலாக தவித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
மலேசியாவை வளப்படுத்தியதில் நெறிப்படுத்தியதில் மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 4 லட்சத்திற் கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு நாடாளுமன்றத்திலோ, செனட் சபை யிலோ, சட்டமன்றத்திலோ, ஊராட்சி களிலோ பிரதிநிதிகள் இல்லை. இந்திய முஸ்லிம்களுக்கு என்று கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு, ஈப்போ, ஜொகூர் பாரு மற்றும் பல இடங்களில் பள்ளி வாசல்கள் இருக்கின்றதே தவிர பள்ளிக்கூடங்கள் இல்லை. இதைப்பற்றி இந்திய முஸ்லிம் தலைவர்கள் மலேசிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
உணவகங்களும் மளிகைக்கடை களும் மட்டுமே வாழ்க்கையாக இருக் கக் கூடாது. ஒரு சமூகம் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் இருண்டு போய்விடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். சின்ன சின்ன சச்சரவுகளை புறந்தள்ளிவிட்டு பொது ஒற்றுமையோடு சமுதாய பிரச்சினை களை கருத்தில் கொள்ளவேண்டும். மலேசியாவில் வசிக்கும் இந்திய முஸ் லிம்கள் தங்கள் தாய்நாடு மலேசியா தான் என்பதை மறந்து விடக்கூடாது என்றார் தமீமுன் அன்சாரி.