Tuesday, December 2, 2008

முத்துப்பேட்டையில் மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

முத்துப்பேட்டையில் மாபெரும்
அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்



கடந்த 21.11.2008 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெருவில் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தீன் முகம்மது தலைமையில் மௌலவி. அப்துற் ரஹிம் திடலில் அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் முத்துப்பேட்டை மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



முன்னதாக அன்று மதியம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இஸ்லாமிய வங்கியியல் என்கிற தலைப்பில் தமுமுக தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜமாத் நிர்வாகிகளிடம் உள்ளூர் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

மறுநாள் (22.11.2008) முத்துப்பேட்டை ஆசாத் நகரில் அல்-மஹா பெண்கள் மதரசாவில் பெண் கல்வி பற்றி தமுமுக தலைவர் உரையாற்றினார். இந்த மதரசாவில் பெண்களுக்கென மார்க்கக் கல்வி,கம்யூட்டர் கல்வி, பெண்களுக்கென தொழில் பயிற்சி வழங்கப்படடு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் செய்யது அலி பாக்கவி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி அனைத்தையும் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

நன்றி: தமுமுக இணையதளம்.