நாகர்கோவிலில் இஸ்லாமிக் சேனல் சார்பில் மானுட வசந்தம் நிகழ்ச்சி
நாகர்கோவிலில் இஸ்லாமிக் சேனல் சார்பில் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மது அவர்கள் வழங்கும் மானுட வசந்தம் கேள்வி பதில் நிகழ்ச்சி பயோனியர் முத்து மஹாலில் 28 டிசம்பர் 2008 ஞாயிறு காலை நடைபெற்றது.
துவக்கமாக அனீஸ்ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். திருவை அப்துர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். ஐ.ஆர்.ஜி.டி. தலைவர் செய்யது முஹம்மது கனி, நாகர்கோவில் ஐ.சி.ஏ.தலைவர் வழக்கறிஞர் எம். அஹமதுகான், மவ்லவி காஜா ஷேக் மிஸ்பாஹி, கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், டாக்டர் அப்துல் ஹமீது, முஸ்லிம் கலைக்கல்லூரி தலைவர் செய்யது முஹம்மது, மெட் கல்வியியல் கல்லூரி தலைவர் முஹம்மது எக்கீம், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி டாக்டர் முஹைதீன், இமாம் இப்னு அப்பாஸ், எம்.சி. முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் எம். அசீம் அறிமுகவுரை நிகழ்த்தினார்.ஷாஜஹான்ஸ் ஜூவல்லர்ஸ் ஹெச்.ஷாஜஹான் வாழ்த்துரை வழங்கினார்.
சகோதர சமுதாய சகோதரர்களின் கேள்விகளுக்கு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பதில் அளித்தார்.
சென்னை ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரியா நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதர சமுதாயப் பிரமுகர்களுக்கு திருக்குர்ஆனை வழங்கினார்.
ஹைதுரூஸ் நன்றியுரை நிகழ்த்தினார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.