Showing posts with label அமீரகம் தோப்புத்துறை. Show all posts
Showing posts with label அமீரகம் தோப்புத்துறை. Show all posts

Friday, July 17, 2009

ஏழை மக்களின் துயர்துடைக்கும் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

ஏழை மக்களின் துயர்துடைக்கும்

நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் மிஸ்கீன்கள் பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

இந்த உன்னத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக கடந்த 13.08.2005 சனிக்கிழமை அன்று மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகத்தில் வைத்து அலோசனை செய்யப்பட்டு “அல் பத்தாஹ் உதவும் அமைப்பு” (பைத்துல்மால்) என்ற பெயரில் ஓர் அமைப்பு அல்லஹ் மாபெறும் கிருபையால் துவங்கப்பட்டது. ( அல் ஹம்துலில்லாஹ் )

அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் :

  • ஏழை,எளியவர்கள் (யாசிப்போர்கள்) இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
  • வட்டி கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.
  • இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவுகளினால் பாதிக்கப் பட்டோருக்கு மத,இன பேதமின்றி உதவிக்கரம் நீட்டுதல்.
  • ஏழைகளின் ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.
  • ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.
  • ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.
  • விதவைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.
  • ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.
  • வசதியற்றவர்களின் பழுது அடைந்த கூரை வீடுகளை செப்பனிடுதல்.
  • மருத்துவ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.
  • இரத்ததான முகாம் அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.
  • பிரயாணத்தில் உடைமைகளை இழந்து பரிதவிப்பவருக்கு பிரயாண செலவுக்கு உதவி செய்தல்.

இவ்வாறான உன்னத உயரிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு துவங்கபட்டது, துவங்கப்பட்ட நாள்முதல் பல சேவைகளை செய்து வருகிறது.

ஏழை மக்களின் துயர்துடைக்கும் இ ந் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

———————————————————————————————-

அல் பத்தாஹ் உதவும் அமைப்பு ( பைத்துல்மால் )
மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகம்,
109/1,மர்க்கஸ் தெரு,தேத்தாகுடி தெற்கு,
தோப்புத்துறை, நாகை மாவட்டம்
போன்: 04369 316155,99947 60816

அமீரகத்தில் தொடர்புக்கு…

+971 50 8813666, +971 50 5504525

————————————————————————————————

Friday, July 3, 2009

தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும் கந்தூரி விழா

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும்
கந்தூரி விழா
தோப்புத்துறையில் கடந்த இரண்டு ( 2,3 ஜூலை) நாட்காளாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு சவால் விடும் பொருட்டு வெகு ஜோராக கந்தூரி விழா நடந்தது, சந்தனக் கூட்டுக்கு முதல் நாளான 2 ஆம் தேதி மாபெரும் இன்னிசையுடன் நடன நிகழ்ச்சி நடந்தது, அதில் ஆண்களும்,பெண்களும் மற்றும் சமாதி வழிபாட்டுக்காரர்களும் திரளனோர் கண்டுகளித்தனர், பெண்களுக்கான பகுதியில் சில வெளியூர் ஆண்களும் நின்றதால் சிறு கைகலப்பு நடந்தது,அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்தனக் கூடு நிகழ்ச்சியும் ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டனர்,ஏகத்துவம் எழுச்சி அடைந்த காலத்திலும் இஸ்லாத்திற்கே சவால் விடும் அளவிற்கு நடந்தது குறிப்பிடத்தக்கது,இதுக்குறித்து பின்வரும் கட்டுரையை வாசித்து வரக் கூடிய காலங்களில் இந்த மாதிரியான மாபெரும் தீங்குகளிருந்து நம் குடும்பத்தை காப்பற்ற முயற்சி செய்வொம்,இறைவன் நம்மை காப்பற்றுவனாக…


- ஆதம்.ஆரிபின்

சந்தனக் கூடும் – சமாதி வழிபாடும்

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.
அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.
‘எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.
அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)
நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?
பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்-

என்னும் நூலிலிருந்து…

Thursday, May 14, 2009

நாடாளுமன்ற தேர்தல் தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை

தேர்தல் சிறப்பு செய்திகள் : நாடாளுமன்ற தேர்தல்

தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை



நாடாளுமன்ற தேர்தல் :
தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் ஏழு வெட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அதில் திமுக வுக்கும் கம்யூஸ்ட் கட்சிக்கு கடும் போட்டி நடைபெற்றது,தொப்புத்துறை யில் ஆரம்பத்தில் திமுக-விற்கு ஆதரவு அலை வீசியது,வாக்கு பதிவுக்கு முதல் நாளான நேற்று திடிரென தமுமுக அமைப்பை சார்ந்தவர்கள் கம்யூஸ்ட்டுக்கு ஆதரவக களத்தில் இறங்கினர்,இதனால் தோப்புத்துறை மக்களின் திமுக ஓட்டுக்கள் பெரிதும் பதிக்கப்பட்டது என்பது மறுக்க இயாலாது,

மேலும் திமுகவினருக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, சென்னை யில் நடந்த த.மு.மு.க வினருக்கு எதிரான தாக்குதல் பற்றி கேள்விப் பட்டதும் மும்முரமாக திமுகவுக்கு எதிராக களமிரங்கினார்கள்,இதற்கிடைய திமுக கூட்டணி கட்சிக்கும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஹத்திப் தெரு வில் சிறு சலசலப்பு நடந்தது போலிசார் தலையிட்டு சமாதனப் படுத்தினர்,மதியத்திற்கு பிறகு தானாமூனா பள்ளி வாக்குசாவடி அருகே இருகட்சிகிடையே கை கலப்பு நடந்தது போலிஸ் தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது, இந்த வாக்கு சாவடி மட்டும் சற்று பதட்டமாக காணப்பட்டது.

முழுக்க முழுக்க தோப்புத்துறை வாக்குகள் திமுகவிற்கே என்ற நிலை மாறி திடிரென த.மு.மு.க வினர் களம் இறங்கியதால் சற்று ஆட்டம் கண்டது உண்மையே.

தோப்புத்துறை-யிலிருந்து ஆதம்.ஆரிபின்

Tuesday, April 7, 2009

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!

அல்லாஹ்வின் திருபெயரால்...

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!


மாபெரும் இசுலாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இடம் : ஹத்திப் தெரு சந்திப்பு,

தோப்புத்துறை, நாகை மாவட்டம்

நாள்: 11 - 04 - 20009, சனிக்கிழமை,

நேரம் : மாலை 6.30 மணியளவில்

சிறப்புரையளர்கள் :
மவுலவி. எம்.முஹம்மது யூசுப் மிசுபாயி,
தொண்டி கலந்தர் அபூபக்கர் யூசுபி,
மற்றும்
அப்சலுல் உலமா முஹம்மது இசுமாயில் நூரி,

இன்சா அல்லாஹ்...
மாலை 6.30 முதல் இஷா வரை
மதரசா மாணவ,மாணவியவர் நிகழ்ச்சி
நடைப்பெறும்

மேலும் விபரங்களுக்கு...
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

தோப்புத்துறை- Mobile : 9994760816 / 9003329412

Monday, March 23, 2009

" மாபெறும் இஸ்லாமிய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் "

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்!


"அல்லாஹ்வையன்றி எந்தத் தீமையையோ, நன்மையையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையும் நீங்கள் வணங்குகிறீர்களா?" (5:76)


இறைவன் நாடினால்... அடுத்த மாதம் ( April ) நாகப்பட்டினம் மாவட்டம்தோப்புத்துறை- யில் " மாபெறும் இஸ்லாமிய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் " நடைபெற இருக்கிறது, அது சமயம் பல மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்தஉள்ளனர், அதற்கு தங்களால் ஆனா பொருளாதார உதவியை அளிக்குமாறுகேட்டுக் கொள்கிறோம்.



தொடர்புக்கு : +91 9894530893 / 9003329412 , அமீரகத்தில் :+ 971 50 8813666 / 050 5780539



Saturday, October 4, 2008

தோப்புத்துறை மர்கஸ் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை


நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் கடந்த 30-09-2008 அன்று காலை 6:45 மணியளவில் தோப்புத்துறை மர்கஸ் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை மர்கஸ் ஈத்கா திடலில் சிறப்பாக நடந்தேரியது,
இதில் மர்கஸ் இமாம் யாசிர் அரபாத் பிர்தௌஸ் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து அதன் பிறகு பெருநாள் (குத்பா) உரையாற்றினார்கள். இதில் மக்கள் திரளாக கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹமதுலில்லாஹ், அனைவருக்கும் மதியம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது .


Sunday, September 21, 2008

தமுமுக - ராஸ் அல் கைமா மண்டலம் சார்பாக நிர்வாகிகள் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

தமுமுக - ராஸ் அல் கைமா மண்டலம் சார்பாக நிர்வாகிகள் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 21-09-2008 ஞாயிற்றுகிழமை இரவு 7.30 மணியளவில் அல் நகில் ஆதம்.ஆரிப் இல்லத்தில் நடைபெற்றது,முன்னதாக அமீரக துணை தலைவர் ஹுசைன் பாஷா தமுமுக அமீரகத்தில் செய்து வரும் பணிகள் பற்றி விவரித்தார்,அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மௌலவி .காசிம் பிர்தௌசி அவர்கள் தமுமுக வின் சமுதாய பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் எழுச்சியும் எடுத்துரைத்தார்
பின்னர் அமீரக தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் தமுமுக வின் அவசியம் பற்றி யும்,மருத்துவ பணிகள்,மார்க்க பிரச்சாரம்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பற்றி விவரித்தார்,
அடுத்ததாக நிருவாக தேர்வு நடத்தப்பட்டது,கீழ்க்கண்ட நிருவாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர்,இந்நிகழ்ச்சியை மண்டல ஆலோசகர் ஆதம்.ஆரிபின் சிறப்பாக ஒருங்கிணைத்து நன்றிவுரையாற்றினர்,து ஆ ஓதி அமர்வு முடிவடைந்தது.

ரஸல் கைமா புதிய நிருவாகிகள் :

தலைவர் : ஜாபர் சாதிக் ,கும்பகோணம்
செயலாளர் : ஷாஜகான்,பொதக்குடி
பொருளாளர் : ஹாஜா , கடியசேரி,திருத்துறைபூண்டி
துணை தலைவர் : பெரோஸ் கான்,பரமக்குடி
துணை செயலாளர்: ஜியாவுதின்,கூத்தநல்லூர்

Monday, June 30, 2008

ஷார்ஜாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

கடந்த வெள்ளி ( 26 - 06 - 2008 ) அன்று ஷார்ஜா பல்தீயா கேம்ப் -ல் -.மு.மு. சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு தோப்புத்துறை அபுல் ஹசன் தலைமை வகித்தார், தென்காசி மிஸ்பாஹுல் ஹுதாநத்வி அவர்கள் "ஷகாபாக்களின் தியாக வரலாறு" என்ற தலைமையில் சிறப்புரைஆற்றினார் , பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர், புளியங்குடிசித்திக் நன்றி உரையாற்றினார், மேலும் கூட்டத்தில் மாதம் தோறும் இது போன்று நிகழ்ச்சி க்கு ஏற்பாடு செய்ய முடிவு எடுக்க பட்டுள்ளது ,
மேலும்
விபரங்களுக்கு 050 8606498 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Friday, May 23, 2008

அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்

அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்

இந்த மாத இதழில்...

  • மார்க்க கல்வி ஏழை மக்கள் தான் பயில வேண்டுமா ? தலையங்கம்
  • வட்டியின்றி வாழ முடியாதா- எஸ். அபு புஷ்ரா
  • கல்வியை அடைவதற்கு பாத்து வழிகள் - எம்.எப் . அலி
  • மிஸ்காதுல் மசாபிஹ் ( தொடர் )- தமிழில் :எஸ். சையது அலி பைஷி
  • என் வீட்டுத் தோட்டத்தில் - ஜமீலா பின்த் இஸ்மாயில்
  • சஹாபாக்கள் வரலாறு - அப்துர் ரஹ்மான் மன்பஈ
  • ஆவின் அரசியல் - மதுரை அப்துல்லா மன்பஈ
  • மிகப்பெரிய அநீதி - தொகுப்பு : தேங்கை முனிப்
  • பொருளாதார சுதந்திரம்
  • பாதுகாப்பு கோருதல்
  • திரு குர்ஆன் வினா-விடை

மற்றும் பல தலைப்புகளில் ....

வாங்கி படித்து பயன் அடைவீர் ....

துபையில் தொடர்புக்கு : SULAIMAN 050 ௨௭௧௬௮0௧

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்
நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள் :ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.அல்லது விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்


பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

CONTACT

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING NO 4
MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100 FAX : 044 2823
www.bsazakaat.orgஎ

Wednesday, May 21, 2008

நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை

நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை



நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஜமாஅத் மன்றம் சார்பாக அவசரகால ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) வழங்க பட்டது,தோப்புத்துறை மக்களின் நீண்ட கால தேவைகளில் ஒன்றான ஆம்புலன்ஸ் வசதிக்காக ஜமாஅத்-தார்கள் முயற்சிகள் மேற்கொள்ள பட்டது, தோப்புத்துறை தொழிலதிபர் ஜனாப். ஆரிபா அவர்களின் நன்கொடையில் அதற்கான வாகனம் வாங்கப்பட்டது,இதன் மூலம் தோப்புத்துறை மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவார்கள்,
ஜமாஅத் மன்றம் மற்றும் உதவும் கரங்கள் என்ற அமைப்பு சார்பாக ஆரிபா குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்து பிரசுரம் வெளியிட பட்டது.



தகவல் - .நஜிப் -
செய்திகள் தொகுத்தவர் - ஆதம்.ஆரிபின்


,

Tuesday, May 20, 2008

தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு

துபாயில் ஜாக் தலைமை நிலைய நிர்வாகிகளுடன் தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு - புகைப்படங்கள்









ஜாக் தலைவர் எஸ்.கே.கமாலுதீன் மதனி'யுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள் ஹஜாதீன் , அப்துல் அஜீஸ் ,ஜெகபர் அலி மற்றும் உறுப்பினர்கள் .



கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் அமீர் அப்துல் அஜீஸ் பேசியபோது...




அரபு அமீரக ஜாக் அமீர் ஷைகு . இக்பால் மதனியுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்




கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்

Sunday, May 18, 2008

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)

இன்சா அல்லாஹ்...
23-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு
அஜ்மான் எல்லையில், சார்ஜா எப்ப்கோ பெட்ரோல் பங்க் அருகில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் "யின்
அமீரக ஆலோசனை கூட்டம்
நடைபெற உள்ளது,

அதுசமயம் தாயக அமீர் கமாலுதீன் மதனி , அமீரக ஜாக் தலைவர் இக்பால் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், நிருவாகிகள் அனைவரும் கலந்து கொள்வீர்...

மேலதிக தகவல்களுக்கு...

நூருல் அமீன்,கைபேசி : 055 - 5563733

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "



அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)

நேற்று 16-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டததில் தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழச்சியில் அமீரக "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீரக நிர்வாகிகள் தோந்தெடுக்கப்பட்டார்கள்.


செய்திகள் : JAQH அமீரகம்

Wednesday, May 14, 2008

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)

இன்சா அல்லாஹ்... வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகை க்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது, அதுசமயம் தாயகத்திலிருந்து அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், மேலும் அமீரக நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது,அனைவரும் வருக பயன் பெறுக!

மேலதிக தகவல்களுக்கு...

நூருல் அமீன்,கைபேசி : 0௫௫ 5563733

Publish Post

Monday, April 28, 2008

" சோவனா நகர்" தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகில் காலி மனை விற்பனைக்கு உள்ளது,

"
சோவனா நகர்" தஞ்சாவூர்
  • தஞ்சை மெடிக்கல் காலேஜ் - லிருந்து அரை கிலோமீட்டர் தூரம்
  • குறைவான முதலீடு நிறைவான இலாபம்


அரபு அமீரகத்தில் தொடர்புக்கு... ஆதம்.ஆரிபின்