Tuesday, January 25, 2011

Mosque 1 2

Tuesday, August 31, 2010

Friday, July 17, 2009

ஏழை மக்களின் துயர்துடைக்கும் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

ஏழை மக்களின் துயர்துடைக்கும்

நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் மிஸ்கீன்கள் பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

இந்த உன்னத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக கடந்த 13.08.2005 சனிக்கிழமை அன்று மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகத்தில் வைத்து அலோசனை செய்யப்பட்டு “அல் பத்தாஹ் உதவும் அமைப்பு” (பைத்துல்மால்) என்ற பெயரில் ஓர் அமைப்பு அல்லஹ் மாபெறும் கிருபையால் துவங்கப்பட்டது. ( அல் ஹம்துலில்லாஹ் )

அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் :

  • ஏழை,எளியவர்கள் (யாசிப்போர்கள்) இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
  • வட்டி கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.
  • இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவுகளினால் பாதிக்கப் பட்டோருக்கு மத,இன பேதமின்றி உதவிக்கரம் நீட்டுதல்.
  • ஏழைகளின் ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.
  • ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.
  • ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.
  • விதவைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.
  • ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.
  • வசதியற்றவர்களின் பழுது அடைந்த கூரை வீடுகளை செப்பனிடுதல்.
  • மருத்துவ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.
  • இரத்ததான முகாம் அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.
  • பிரயாணத்தில் உடைமைகளை இழந்து பரிதவிப்பவருக்கு பிரயாண செலவுக்கு உதவி செய்தல்.

இவ்வாறான உன்னத உயரிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு துவங்கபட்டது, துவங்கப்பட்ட நாள்முதல் பல சேவைகளை செய்து வருகிறது.

ஏழை மக்களின் துயர்துடைக்கும் இ ந் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

———————————————————————————————-

அல் பத்தாஹ் உதவும் அமைப்பு ( பைத்துல்மால் )
மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகம்,
109/1,மர்க்கஸ் தெரு,தேத்தாகுடி தெற்கு,
தோப்புத்துறை, நாகை மாவட்டம்
போன்: 04369 316155,99947 60816

அமீரகத்தில் தொடர்புக்கு…

+971 50 8813666, +971 50 5504525

————————————————————————————————

Friday, July 3, 2009

தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும் கந்தூரி விழா

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும்
கந்தூரி விழா
தோப்புத்துறையில் கடந்த இரண்டு ( 2,3 ஜூலை) நாட்காளாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு சவால் விடும் பொருட்டு வெகு ஜோராக கந்தூரி விழா நடந்தது, சந்தனக் கூட்டுக்கு முதல் நாளான 2 ஆம் தேதி மாபெரும் இன்னிசையுடன் நடன நிகழ்ச்சி நடந்தது, அதில் ஆண்களும்,பெண்களும் மற்றும் சமாதி வழிபாட்டுக்காரர்களும் திரளனோர் கண்டுகளித்தனர், பெண்களுக்கான பகுதியில் சில வெளியூர் ஆண்களும் நின்றதால் சிறு கைகலப்பு நடந்தது,அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்தனக் கூடு நிகழ்ச்சியும் ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டனர்,ஏகத்துவம் எழுச்சி அடைந்த காலத்திலும் இஸ்லாத்திற்கே சவால் விடும் அளவிற்கு நடந்தது குறிப்பிடத்தக்கது,இதுக்குறித்து பின்வரும் கட்டுரையை வாசித்து வரக் கூடிய காலங்களில் இந்த மாதிரியான மாபெரும் தீங்குகளிருந்து நம் குடும்பத்தை காப்பற்ற முயற்சி செய்வொம்,இறைவன் நம்மை காப்பற்றுவனாக…


- ஆதம்.ஆரிபின்

சந்தனக் கூடும் – சமாதி வழிபாடும்

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.
அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.
‘எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.
அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)
நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?
பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்-

என்னும் நூலிலிருந்து…

Wednesday, May 27, 2009

நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில் மதரஸா மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில்

மதரஸா மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

இடம் : மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை

நாள் : 30 – 05 – 2009, சனிக்கிழமை,

( இன்ஸா அல்லாஹ்) மக்ரிப் தொழுகைக்கு பிறகு,

கிராஆத் : எஸ்.நுர் முஹம்மது அவர்கள்

முன்னிலை :

எம்.அவுலியா முஹம்மது,அவர்கள்,

துணைத் தலைவர்,ஜே.யூ.கியூ.எச்.

எச்.எ.சேக் அப்துல் காதர்,அவர்கள்,

சிங்கை பிரதிநிதி.

எம்.ஜாஹீர் உசேன்,அவர்கள்,

துபாய் பிரதிநிதி.

எஸ்.எம்.பாரி,அவர்கள்,

துபாய் பிரதிநிதி.

எஸ்.சபீர் அஹமத்,அவர்கள்,

பொருளாளர்,ஜே.யூ.கியூ.எச்

எச்.சேக் தாவுத்,அவர்கள்,

செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

ஒய்.முஹம்மது ஆரிப்,அவர்கள்,

துணை செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

தலைமை :

எ.அஹமது ரபீக்,அவர்கள்,

தலைவர்,ஜே.யூ.கியூ.எச்

வரவேற்புரை :

பி.எஸ்.ராவுத்தர்ஷா,அவர்கள்,

மூத்த உறுப்பினர்,ஜே.யூ.கியூ.எச்

சிறப்புரை :

மௌலவி அப்சலுல் உலமா

முஹம்மது இஸ்மாயில் நூரி, அவர்கள்,

இமாம் – மஸ்ஜிதுல் முஸ்லிமீன்.

நன்றியுரை :

ஆதம்.ஆரிபின்

குறிப்பு :

  • இன்ஷா அல்லாஹ், குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்,
  • மதரஸா மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சி நடைபெறும்,
  • அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபி கல்லூரி மணவிகளுக்கு
  • கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு

பயன் பெருமாறு கேட்டுக் கொள்கிறொம்.

———————————————————

மஸ்ஜிதுல் முஸ்லிமீன் (மர்க்கஸ்)

அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி

அல்ஃபத்தாஹ் பைத்துல் மால் ( உதவும் அமைப்பு )

ஜம்யிய்யத்து அஹ்லில் குர்-ஆன் வல் ஹதிஸ் (J.A.Q.H)

மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை,நாகை மாவட்டம்

Thursday, May 14, 2009

நாடாளுமன்ற தேர்தல் தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை

தேர்தல் சிறப்பு செய்திகள் : நாடாளுமன்ற தேர்தல்

தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை



நாடாளுமன்ற தேர்தல் :
தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் ஏழு வெட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அதில் திமுக வுக்கும் கம்யூஸ்ட் கட்சிக்கு கடும் போட்டி நடைபெற்றது,தொப்புத்துறை யில் ஆரம்பத்தில் திமுக-விற்கு ஆதரவு அலை வீசியது,வாக்கு பதிவுக்கு முதல் நாளான நேற்று திடிரென தமுமுக அமைப்பை சார்ந்தவர்கள் கம்யூஸ்ட்டுக்கு ஆதரவக களத்தில் இறங்கினர்,இதனால் தோப்புத்துறை மக்களின் திமுக ஓட்டுக்கள் பெரிதும் பதிக்கப்பட்டது என்பது மறுக்க இயாலாது,

மேலும் திமுகவினருக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, சென்னை யில் நடந்த த.மு.மு.க வினருக்கு எதிரான தாக்குதல் பற்றி கேள்விப் பட்டதும் மும்முரமாக திமுகவுக்கு எதிராக களமிரங்கினார்கள்,இதற்கிடைய திமுக கூட்டணி கட்சிக்கும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஹத்திப் தெரு வில் சிறு சலசலப்பு நடந்தது போலிசார் தலையிட்டு சமாதனப் படுத்தினர்,மதியத்திற்கு பிறகு தானாமூனா பள்ளி வாக்குசாவடி அருகே இருகட்சிகிடையே கை கலப்பு நடந்தது போலிஸ் தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது, இந்த வாக்கு சாவடி மட்டும் சற்று பதட்டமாக காணப்பட்டது.

முழுக்க முழுக்க தோப்புத்துறை வாக்குகள் திமுகவிற்கே என்ற நிலை மாறி திடிரென த.மு.மு.க வினர் களம் இறங்கியதால் சற்று ஆட்டம் கண்டது உண்மையே.

தோப்புத்துறை-யிலிருந்து ஆதம்.ஆரிபின்

Wednesday, May 13, 2009

தமிழகத்தில் எங்கிருந்தும் காவல் துறைக்கு புகார் தெரிவிக்க!

தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!
தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி சேவை
போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்


சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழி-தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.

பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.

பி.எஸ்.என்.எல். தொலைபேசி- 044 28447200
டாடா இண்டிகாம் தொலைபேசி- 044 64555100, 64556100

(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.