Thursday, June 12, 2008

10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்

தமிழகத்தில் 10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் ஜனநாயக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிற்கு வருகை தந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப்பிற்கு மாவட்டத் தலைவர் கோபிகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு மாநிலத் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது
தமிழ்நாட்டில் அண்ணா பிறந்த நாள் செப்.15ம் தேதியில் கைதிகளின் தண்டனை நாளைக் குறைத்து விடுதலை செய்வது போல் 10 ஆண்டுகளுக்கு மேல்சிறையில் உள்ள 54 முஸ்லீம்களை இந்து மத விரோதிகள் என சித்தரிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக அரசு முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம். தலித் மக்களுக்கு 18 சதவீதத்தில் 10 சதவீதம் நிரப்ப வேண்டும். சச்சார் கமிட்டியை உடனே அமல்படுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு சமூக அரசியலில் முன்னேற மத்திய அரசு வாய்ப்பளிக்க வில்லை. எனவே காங்கிரஸை புறக்கணிக்க முஸ்லீம்கள் தயாராக உள்ளார்கள். சென்னையில் அப்பாவி 3 பேர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று முத்திரையிடப் பட்டுள்ளதை கண்டிக்கிறோம் என்று கூறினார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் வேங்கை சந்திரசேகரன், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், கொள்கை பரப்புச்செயலாளர் ஷாஜகான், அமைப்புச்செயலாளர் வீரர் அப்துல்லா, தேனி மாவட்டச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்
தமிழகத்தில் 10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ள 54 முஸ்லீம் கைதிகளை அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் ஜனநாயக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிற்கு வருகை தந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப்பிற்கு மாவட்டத் தலைவர் கோபிகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு மாநிலத் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது
தமிழ்நாட்டில் அண்ணா பிறந்த நாள் செப்.15ம் தேதியில் கைதிகளின் தண்டனை நாளைக் குறைத்து விடுதலை செய்வது போல் 10 ஆண்டுகளுக்கு மேல்சிறையில் உள்ள 54 முஸ்லீம்களை இந்து மத விரோதிகள் என சித்தரிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக அரசு முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம். தலித் மக்களுக்கு 18 சதவீதத்தில் 10 சதவீதம் நிரப்ப வேண்டும். சச்சார் கமிட்டியை உடனே அமல்படுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு சமூக அரசியலில் முன்னேற மத்திய அரசு வாய்ப்பளிக்க வில்லை. எனவே காங்கிரஸை புறக்கணிக்க முஸ்லீம்கள் தயாராக உள்ளார்கள். சென்னையில் அப்பாவி 3 பேர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று முத்திரையிடப் பட்டுள்ளதை கண்டிக்கிறோம் என்று கூறினார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் வேங்கை சந்திரசேகரன், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், கொள்கை பரப்புச்செயலாளர் ஷாஜகான், அமைப்புச்செயலாளர் வீரர் அப்துல்லா, தேனி மாவட்டச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.