தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அரியமங்கலம் கிளையின் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியமங்கலம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்டச் செயலர் ஏ. அப்துல் ரஹிம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
இம்முகாமில் 20-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். 200-க்கும் மேற்பட்டோர் ரத்த வகையைக் கண்டறிந்தனர்.
தமுமுக நிர்வாகிகள் எஸ். இப்ராஹிம்ஷா, எம். முகமது ராஜா, அரியமங்கலம் கிளைச் செயலர் கே. தமீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.