Thursday, June 12, 2008
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு பெற்று தந்து சாதனை
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு பெற்று தந்து சாதனை
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு மிகவும் சிறப்பாக செயல்பட்டு கடந்த வருடம் 100 சதவீதம் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இந்த வருடம் வேலைவாய்ப்பு பிரிவு மூலமாக பல்வேறு தினங்களுக்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 334 பேர் 35 வெவ்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வு மூலம் பெங்களூரை சேர்ந்த பி.பி.எல் ஹைதராபாத்தை சேர்ந்த ஆசியா இன்ஜினியரிங் நிறுவனங்களில் சுமார் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு வேலைவாய்ப்பு பிரிவு அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தந்து சிறந்த சேவை செய்து வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் மன்னார் வளைகுடா உயிர்கோள் சார்பாக அறக்கட்டளை நிதி உதவியுடன் ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சி மேற்கொண்ட 45 பெண்களில் 36 பெண்கள் திருச்சி புத்தனாம்பட்டியில் உள்ள எம்.என்.சி நிறுவனமான லாயாசன் இந்திய நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஓராண்டு ஏ.சி பயின்ற மாணவர்கள் சென்னையில் பிரபல நிறுவனங்களில் டெக்னீசியனாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.
மின்சேமிப்பு உபகரணங்கள் அறிமுகப்படுத்த அமுல்படுத்திடும் புதிய தொழில் நுட்பத்தில் எலக்ட்ரிக்கல் பயின்ற பயிற்சியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலாக்க அலகு மூலம் 6 மாத காலம் வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது ஞிக்கும் பயிற்சி மேற்கொண்ட இளைஞர்கள் 25 நபர்களும் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.