Sunday, June 22, 2008

சைபர் கிரைம் படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) இணைந்து, முதுநிலை சைபர் சட்ட பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் அறிமுக விழா, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், இக்னோ இணைவேந்தர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா, இக்னோ சட்டப் பள்ளி இயக்குநர் கிருஷ்ணாராவ், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் வணங்காமுடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சைபர் சட்ட பட்டயப்படிப்பு குறித்து இக்னோ இணைவேந்தர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது: முதுநிலை சைபர் சட்ட பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள், தரமணியில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. இந்த படிப்பு 6 மாத காலம் கொண்டது. கல்விக் கட்டணம் ரூ.5,000. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.100.
அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்களை பெற ரூ.150க்கு டிடி எடுத்து, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள், அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் வரும் 23ம் தேதி (நாளை) முதல் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

www.nellaieruvadi.com