Monday, December 29, 2008
நாகர்கோவிலில் இஸ்லாமிக் சேனல் சார்பில் மானுட வசந்தம் நிகழ்ச்சி
நாகர்கோவிலில் இஸ்லாமிக் சேனல் சார்பில் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மது அவர்கள் வழங்கும் மானுட வசந்தம் கேள்வி பதில் நிகழ்ச்சி பயோனியர் முத்து மஹாலில் 28 டிசம்பர் 2008 ஞாயிறு காலை நடைபெற்றது.
துவக்கமாக அனீஸ்ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். திருவை அப்துர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். ஐ.ஆர்.ஜி.டி. தலைவர் செய்யது முஹம்மது கனி, நாகர்கோவில் ஐ.சி.ஏ.தலைவர் வழக்கறிஞர் எம். அஹமதுகான், மவ்லவி காஜா ஷேக் மிஸ்பாஹி, கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், டாக்டர் அப்துல் ஹமீது, முஸ்லிம் கலைக்கல்லூரி தலைவர் செய்யது முஹம்மது, மெட் கல்வியியல் கல்லூரி தலைவர் முஹம்மது எக்கீம், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி டாக்டர் முஹைதீன், இமாம் இப்னு அப்பாஸ், எம்.சி. முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் எம். அசீம் அறிமுகவுரை நிகழ்த்தினார்.ஷாஜஹான்ஸ் ஜூவல்லர்ஸ் ஹெச்.ஷாஜஹான் வாழ்த்துரை வழங்கினார்.
சகோதர சமுதாய சகோதரர்களின் கேள்விகளுக்கு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பதில் அளித்தார்.
சென்னை ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரியா நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதர சமுதாயப் பிரமுகர்களுக்கு திருக்குர்ஆனை வழங்கினார்.
ஹைதுரூஸ் நன்றியுரை நிகழ்த்தினார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
முஸ்லீம் என்றாலே தீவிரவாதியா? டைரக்டர் அமீர் பேட்டி!
ஈழத்தமிழர் பிரச்னை குறித்தும் மும்பைத் தாக்குதல்கள் பற்றியும் பேசுகிறார், மீண்டும்.
`யோகி' எந்தளவிற்கு வந்திருக்கிறார்?
"இன்னும் பதினைந்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கிறது.இதுவரை எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். அமீர் ஏன் நடிக்க வந்தான் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஒரு கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் தான் நடிக்கிறான் அல்லது அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார் என்ற உண்மையான காரணம் இருக்கவேண்டும். இது கூட இல்லையென்றால் வேற என்ன?''
ஈழத்தமிழர் பிரச்னையில் குரல் கொடுத்து சிறை சென்றீர்-களே. அங்கு உங்களுக்குக் கிடைத்த சிறை அனுபவங்கள் எந்த உணர்வைக் கொடுத்தி-ருக்கிறது?
"திட்டமிட்டுத் திருடியவன், ப்ளான் பண்ணி சாதுர்யமாக கொலை செய்தவன், மிகவும் பெர்ஃபெக்ட்டாக என்னென்ன வழிகளில் சமூகத்தை ஏமாற்றலாம் எனத் தெரிந்த, படித்த கிரிமினல்கள் பலர் வெளியேதான் இருக்கிறார்-கள். அதே மாதிரி அங்கே உள்ளே இருப்பவர்-களில் பலர் கோபத்தில் கொலை செய்தவர்கள், அவசரப் பட்டுத் திருடியவர்கள், ஆத்திரத்தில் தப்பு செய்து வந்தவர்கள், கிராமங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக ஏதாவது தப்பு செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள் அதிகம். `ஒரு நிமிஷம் கோபப்-பட்டேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஒண்ணுமில்ல. பதினைஞ்சு வருஷம் போச்சு. இளமையைத் தொலைச்-சாச்சு. இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியல' என்று மெஜாரிட்டியான பேர் சொல்லும்போது பரிதாபமாக இருக்கிறது. சிறையில் உள்ள பலர் மனரீதியாகப் பக்குவமடைந்து இருக்கிறார்கள். இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் திருந்தி வாழ்வோம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னும் நிறைய சங்கதிகள் சிறையில் இருக்கிறது. அவற்றையெல்-லாம் படமெடுக்க ஆசை இருக்கிறது.''
மிக விரைவில் தமிழர்களின் மன தைப் பிரதிபலிக்கும் விதத்-தில் ஈழப் படம் ஒன்றை இயக்க-விருப்பதாக வரும் செய்திகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?
"ஈழம் சார்ந்த கதை ஒன்று மட்டும்தான் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால், இல்லை, நிறைய கதைகள் என்னிடம் உள்ளன என்பதுதான் என் பதில். இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. இதேபோல் உண்மையான ஈழப் பிரச்-னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''
ஈழத்தமிழர்களின் படுகொலை-களுக்கு எதிராக குரல் கொடுத்-தீர்கள். அதற்காக சிறை சென்றீர்-கள். ஆனால் சிறையிலிருந்து வந்தபிறகு அந்தப் பிரச்னை குறித்துப் பேசவில்லை. என்ன காரணம்?
"பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்-கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.''.
- இரா. ரவிஷங்கர்
Tuesday, December 23, 2008
Monday, December 22, 2008
Wednesday, December 17, 2008
Sunday, December 14, 2008
இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.
ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்
வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.
முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.
முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.
தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்
Wednesday, December 3, 2008
டிசம்பர் ஆறு - இந்தியாவின் கருப்பு நாளாக கடைபிடிப்போம்.
முஸ்லிம்களே நாம் விடாமல் நீதிக்காகப் போராடுவோம்.!
அல்லாஹ்வின் ஆணையை ஏற்றுச் செயல்படுவோம்.!
இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடையாளங்களையும் பாதுகாக்கவிடப்படும் அழைப்பிற்குத் தயாராக இருப்போம்.
"அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன.எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள் "
டிசம்பர் ஆறு - இந்தியாவின் கருப்பு நாளாக கடைபிடிப்போம்.
Tuesday, December 2, 2008
முத்துப்பேட்டையில் மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
கடந்த 21.11.2008 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெருவில் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தீன் முகம்மது தலைமையில் மௌலவி. அப்துற் ரஹிம் திடலில் அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் முத்துப்பேட்டை மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக அன்று மதியம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இஸ்லாமிய வங்கியியல் என்கிற தலைப்பில் தமுமுக தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜமாத் நிர்வாகிகளிடம் உள்ளூர் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.
மறுநாள் (22.11.2008) முத்துப்பேட்டை ஆசாத் நகரில் அல்-மஹா பெண்கள் மதரசாவில் பெண் கல்வி பற்றி தமுமுக தலைவர் உரையாற்றினார். இந்த மதரசாவில் பெண்களுக்கென மார்க்கக் கல்வி,கம்யூட்டர் கல்வி, பெண்களுக்கென தொழில் பயிற்சி வழங்கப்படடு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் செய்யது அலி பாக்கவி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி அனைத்தையும் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
நன்றி: தமுமுக இணையதளம்.
Sunday, November 23, 2008
இன்ன லில்லாஹி வஇ ன்ன இலய்ஹி ராஜுஹுன்...
Friday, October 24, 2008
ஹஜ் செய்திக் குறிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்.
சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளுக்கு பயிற்சி நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2008-ம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த புனித பயணிகளுக்கு சென்னையில் புத்தறிவுப் பயிற்சி முகாம் நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கருதியுள்ளது. இந்த பயிற்சியின் போது சவூதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழிமுறைகள், ஹஜ் குழு மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் இதர ஏற்பாடுகள் மற்றும் தகவல்கள் பற்றி விரிவாக விளக்கி கூறப்படும். இந்த பயிற்சி முகாம், தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டியின் உதவியுடன் நடத்தப்படுகிறது. 27-ந் தேதி (தமிழ்) மற்றும் 28-ந் தேதி (உருது) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பைத்துல் ஹுஜ்ஜாஜ், (ஹஜ் ஹவுஸ்), எண்.2, டிமெல்லோஸ் ரோடு, சூளை, சென்னை-600112 என்ற முகவரியில் நடைபெறும்.இப்பயிற்சி முகாம்களில், பெண் புனித பயணிகள் உட்பட அனைத்து ஹஜ் பயணிகளும் (தேர்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள்) கலந்து கொள்ளுமாறும், அதன்மூலம் ஹஜ் பயணத்திற்கான விதிமுறைகள், வழிவகைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக தெரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பன்னாட்டு பாஸ்போர்ட்டில் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களும் விரும்பினால் இப்புத்தறிவு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாம்களை நடத்துவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை மாநில ஹஜ் குழு அனுப்பி வைக்க உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா நிறைவேற்றுவது பற்றிய விளக்கங்களை ஆலிம்கள் அளிப்பார்கள்.இது குறித்து மேலும் விவரங்களை அறிய தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவை 044-28252519 மற்றும் 044-28227617 ஆகிய தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to source:http://www.thatstamil.com/
Monday, October 20, 2008
செய்ய முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்!
கோவை,அக், 19- தமிழகசிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி, அவர்களது குடும்பத்தினர் கண்களில் கருப்புத்துணி
கட்டி,கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்திற்க்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமை வகித்தார்.துனணத்தலைவர்
அபுதாஹிர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சிறைகளில் 11 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை,பாரபாட்சம் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும்.
விசாரனை கைதிகளாக சிறையில் உள்ள குணங்குடி ஹனிபா உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும்.
14 ஆண்டுகளாக சிறையில் மன நோயாளியாக அடைக்கப்பட்டிருக்கும் ஹைதர்அலியை ம்னதாபிமானதடதோடு தம்ழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
கோவை தனி நீதிமன்றத்தில் 13 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள்,தண்டனை காலத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்டனர்: நியாயமாக இவாகளுக்கு
வழங்க வேண்டிய ஜாமீனை வழங்காமல் அரசு மறுப்பு தெரிவிக்கிறது:இவர்களுக்கு ஜாமின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தால்,ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கலாம்: ஆனால்,10 ஆண்டுகள்முடித்தும்,
முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் மறுக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், விரைவில் சென்னையில் தமிழக முதல்வர் விட்டு முன்பு சிறைவாசி குடும்பங்கள் எல்லோரும் முற்றுகையிடுவோம்
என,ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தி- கோவை தங்கப்பா
ஹோட்டலில் சென்று சாப்பிடும் மக்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் சிலர் காகங்களை வேட்டையாடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியை கண்காணித்தனர்.
இந்நிலையில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்த ஒரு பெண்ணும் வாலிபரும் ஏதையோ காகங்களுக்கு தூவினர். நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் அவற்றை கொத்தித் தின்றன. சிறிது நேரத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தன.
மயங்கிய காகங்களை எடுத்து சாக்கு மூட்டையில் வைத்து கட்டினர். இதை பார்த்த போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்த்னர். அவர்கள் இருவரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராதா, அவரது தம்பி முனியாண்டி என்பது தெரியவந்தது.
விசாரணையில், இருவரும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் தங்கி வருகின்றனர். கோழி, காடை, கௌதாரி போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் காகங்களை பிடித்து தரும்படி சில ஹோட்டல் உரிமையாளர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து தெர்மல் நகர் கடற்கரையில் கோழி தீவனத்தில் மரு்நது கலந்து காகங்களை வேட்டையாடியுள்ளனர். பின்னர் தோலை உரித்து இறைச்சியாக்கி தூத்துக்குடி, ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்துள்ளனர்.
ஹோட்டல்களிலும் மசாலா தடவி காடை, கௌதாரி என்று கூறி காக்கா பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹோட்டல்களில் இருந்து இவர்களுக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் உற்வினர்களும் பல இடங்களில் காகங்களை வேட்டையாடி காடை, கௌதாரி என்று கூறி விற்று வருவதாகவும் கூறினர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ரன் என்ற திரைப்படத்தில் விவேக் தனது காமெடியில் காக்கா பிரியாணி பற்றி கூறியபோது வயிறு புடைக்க் சிரித்திருப்போம். ஆனால் அது நிஜம் என்று இப்போது தெரிய வந்துள்ளது.
Tuesday, October 7, 2008
Saturday, October 4, 2008
தோப்புத்துறை மர்கஸ் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை
நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் கடந்த 30-09-2008 அன்று காலை 6:45 மணியளவில் தோப்புத்துறை மர்கஸ் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை மர்கஸ் ஈத்கா திடலில் சிறப்பாக நடந்தேரியது, இதில் மர்கஸ் இமாம் யாசிர் அரபாத் பிர்தௌஸ் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து அதன் பிறகு பெருநாள் (குத்பா) உரையாற்றினார்கள். இதில் மக்கள் திரளாக கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹமதுலில்லாஹ், அனைவருக்கும் மதியம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது .
Sunday, September 28, 2008
கோவை அய்யூப் அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு
"மரணமும் மறுமையும்..."
குவைத் அவ்காஃப் அமைச்சகத்துடன் இந்திய தமிழ் ஜாலியாத் இஸ்லாமிய வழிகாட்டி (IGC) இணைந்து கோவை அய்யூப் அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த வியாழன் 25-09-2008 அன்று குவைத் மஸ்ஜித் அல் கபீர் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
Visit http://igckwt.blogspot.com/ for further details.
திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்
சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறவருமான சான்றிதழ் தேவை இல்லை
உத்தரவிட்ட கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மைஆணையம் நன்றி
பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டசிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறஅதிகாரிகள் அளிக்கும் வருமான சான்றிதழ் தேவை இல்லை என்று உத்தரவிட்டமுதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மைஆணையம் நன்றி தெரிவித்தன.
கல்வி உதவித்தொகை
பள்ளி மற்றும் கல்லூரிகளில் (தொழில் கல்வி உள்பட) படிக்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஆணையிட்டது.
இந்த மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுகளில் 50 சதவீத மார்க்கு எடுத்துஇருக்கவேண்டும். 1-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை உள்ள மாணவர்கள்பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள்இருக்கவேண்டும். இறுதி தேர்வில் 50 சதவீத மார்க்கு எடுத்து இருக்கவேண்டும். ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள்இருக்கவேண்டும். தொழில்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும்மாணவர்களின் பெற்றோர்கள் வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள்இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி உத்தரவு
இந்த உத்தரவுப்படி வருவாய் அலுவலரின் சான்றிதழ், நோட்டரி பப்ளிக் சான்றிதழ்ஆகியவை தேவைப்பட்டது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். எனவே அந்த சான்றிதழ்கள் இல்லாமல் உதவித்தொகை வழங்க ஏற்பாடுசெய்யவேண்டும் என்று இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதை அந்த நேரமே ஏற்று உடனடியாக சான்றிதழ் இல்லாமல் வழங்க கருணாநிதிஉத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்சிறுபான்மையினத்தவர் என்பதற்கான சாதி பற்றிய விவரங்கள் ரூ.10 மதிப்புள்ளகோர்ட்டு சாரா முத்திரை தாளில் எழுதி பெற்றோர் அல்லது பாதுகாவலர் உறுதிமொழி சுய கையொப்பம் இட்டு சமர்ப்பித்தால் போதும். நோட்டரி பப்ளிக்கையொப்பம் தேவை இல்லை, வருவாய் அலுவலரிடம் இருந்து சான்றுபெறத்தேவை இல்லை. வருமான அதிகாரியிடம் இருந்து வருமான சான்றுபெற்று தரவேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இது குறித்து அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனஅதிகாரிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி
முதல் அமைச்சரை சந்தித்த இஸ்லாமிய இலக்கிய கழக சிறப்பு நெறியாளர்கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் கேப்டன் என்.ஏ.அமீர் அலி, பொதுசெயலாளர்எஸ்.எம்.இதயதுல்லா, துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் மற்றும்பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜகான், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோர் முதல் அமைச்சர் கருணாநிதிக்குநன்றி தெரிவித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
ரம்ஜான் பரிசு
கடந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டையும், இந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக சிறுபான்மை மாணவர்களுக்குஉதவித்தொகை பெற எளிமைப்படுத்தி உத்தரவிட்டு எங்களை மனநிறைவுஏற்படுத்தியதற்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பல மாநிலங்கள் சிறுபான்மை மாணவர்களின் உதவித்தொகைக்கு ஒதுக்கியதொகையை செலவழிப்பதில்லை. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும்மேற்பட்ட பிளஸ்-2 மாணவர்களும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்லூரிமாணவர்களும் பயன் அடைந்தனர்.
ஆனால் இந்த வருடம் தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்கஉள்ளனர். எனவே பிற மாநிலங்களில் பயன்படுத்தாத தொகையைதமிழ்நாட்டுக்கு திருப்பும் படி மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் அனுப்பவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=441006&disdate=9/27/2008
நன்றி : முதுவை ஹிதாயத்
Thursday, September 25, 2008
Sunday, September 21, 2008
தமுமுக - ராஸ் அல் கைமா மண்டலம் சார்பாக நிர்வாகிகள் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்
பின்னர் அமீரக தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் தமுமுக வின் அவசியம் பற்றி யும்,மருத்துவ பணிகள்,மார்க்க பிரச்சாரம்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பற்றி விவரித்தார்,
அடுத்ததாக நிருவாக தேர்வு நடத்தப்பட்டது,கீழ்க்கண்ட நிருவாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர்,இந்நிகழ்ச்சியை மண்டல ஆலோசகர் ஆதம்.ஆரிபின் சிறப்பாக ஒருங்கிணைத்து நன்றிவுரையாற்றினர்,து ஆ ஓதி அமர்வு முடிவடைந்தது.
ரஸல் கைமா புதிய நிருவாகிகள் :
தலைவர் : ஜாபர் சாதிக் ,கும்பகோணம்
செயலாளர் : ஷாஜகான்,பொதக்குடி
பொருளாளர் : ஹாஜா , கடியசேரி,திருத்துறைபூண்டி
துணை தலைவர் : பெரோஸ் கான்,பரமக்குடி
துணை செயலாளர்: ஜியாவுதின்,கூத்தநல்லூர்
Wednesday, September 17, 2008
கோவை நீதிமன்றத்தில் அல்-உம்மா தலைவர். அன்சாரி ஆவேசம்!!
கோவை நீதிமன்றத்தில் அல்-உம்மா தலைவர். அன்சாரி ஆவேசம்!!
கோவைகுண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் உள்ள அன்சாரியை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர். வேனிலில் இருந்து இறங்கியதும் அன்சாரி ஆவேசமாக கூறியதாவது:அண்ணா பிறந்ததினத்தையொட்டி தமிழக அரசு 1405 ஆயுள் கைதிகளை விடுதலை செய்தது. இதில் ஒரு முஸ்லிம்கூட விடுவிக்கவில்லை. மதுரையை சேர்ந்த மார்க்கிஸ்ட் கம்யுனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுவித்துள்ளனர்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 72 முஸ்லிம்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க கருணை காட்டவில்லை.இவர்களில் பலர் நோயால் இறக்கும்நிலையில் உள்ளனர்.பாரபட்சம் காட்டும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.இவ்வாறு அன்சாரி ஆவேசமாக கூறினார்.இதனால் நீதிமன்றம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீத்மன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தி. மிண்டும் ஜெயில்க்கு அழைத்து சென்றனர்.
Tuesday, September 16, 2008
தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி
Wednesday, 17 September 2008
அரசியல் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம் தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி
(எம்.ஏ.சலீம் பாவா
படம் : கி.குணசுந்தரி)
கோலாலம்பூர், செப். 16-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்(தமுமுக) முன்னணி செயல் வீரர்களில் ஒருவராக செயல்பட்டதன் வ தமிழக மக்களால் பரவலாக அறி யப்பட்ட வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரும் தமுமுகவின் மாநிலச் செயலாளரும் மக்கள் உரிமைஒ வார இதன் ஆசிரியருமான தமீமூன் அன் சாரி சமீபத்தில் நண்பன் பணிமனைக்கு நல்லெண்ண வருகை மேற்கொண்டார். அவருடன் நடத்திய சந்திப்பிலிருந்து...
கே: தமுமுகவின் தற்போதைய செயல்பாடுகள் பற்றி...
ப: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பணிகள் 13 ஆண்டுகளை கடந்து 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த காலத்தில் நாங் கள் நடத்திய உரிமை போராட்டங்கள் மற்றும் சமூக நல்லிணக்க செயல்பாடு களால் தென்னிந்தியா மக்கள் அனைவ ராலும் அறியப்பட்ட ஒரு வலுவான சக்தியாக எங்களை உருவாக்கி இருக்கிறது.
தமிழக அரசாங்கத்தில் சிறுபான் மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு முதற்கட்டமாக 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித் துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வரலாற்றுபூர்வ வெற்றியாகும். இதன் விளைவாக எங்கள் இயக்கத் திற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தி யில் பன்மடங்கு ஆதரவு பெருகியுள்ளது. இந்த நிலையில் தான் எங்களது அடுத்த கட்ட முயற்சியாக தமுமுக சார்பாக ஒரு அரசியல் கட்சியை மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
கே: கடந்த ஆண்டு மலேசிய வருகை யின் போது தாங்கள் நண்ப னுக்கு வழங்கிய பேட்டியில் நேரடி அரசியல் பற்றி எந்த சிந்தனையு மில்லை என்றீர்கள்... ஆனால் தற் போதைய உங்கள் நிலையில் மாற்றம் தெரிகிறதே?
ப: நாங்கள் அரசியல் தளத்திற்கு செல்வதில் ஆர்வமில்லாத ஒரு இயக்க மாக இருக்கத்தான் முனைப்புக் காட்டி வருகிறோம். ஆனால், முஸ்லிம் சமுதாய மக்களின் பலமான நிர்பந்தத்தின் காரணமாக இஸ்லாமியர்களுக்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனை நாங்கள் விரும்பி போகவில்லை. சமுதாய மக்களின் நிர்பந்தத்தினால் இந்தப் புதிய முடிவை எடுத்துள்ளோம். அதேநேரம் தமுமுக ஒரு சமுதாய இயக்கமாக பொறுப்புடனும் வீரியத்து டனும் செயல்படும். தமுமுகவுடைய ஒரு அரசியல் பிரிவாக மட்டுமே புதிய கட்சி செயல்படும்.
கே: இஸ்லாமிய சமுதாயத்தை பிரதிநிதித்துதான் ஏற்கெனவே பல கட்சிகள் உள்ளனவே? புதிதாக நீங்கள் எதற்கு?
ப: கண்ணியமிக்க பெருந்தலைவர் காயிதேமில்லத் காலத்தில் தமிழகத்தில் 27 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப் பினர்களாக இடம்பெற்றிருந்தனர். ஆனால், இன்றைய நிலை என்ன? அப்துல் சமது, அப்துல் லத்தீப் ஆகியோரின் மறைவுக்கு பிறகு இஸ்லாமியர்களின் அரசியல் பலம் வெற்றிடமாக இருக்கிறது. முஸ்லிம்களின் அரசியல் கட்சிகள் பலமிழந்து அதனுடைய பிரதிநிதிகள் கூட சமூக மக்களின் குரலை பிரதிநிதிக்காமல் திமுக உறுப்பினர்களாக சட்டசபையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நம்முடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் தகுதி யான சமுதாய பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்து அனுப்ப வேண்டிய கடமையும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வலுவான சமுதாய இயக்கமாக இருக்கும் நாங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பா விட்டால் வேறு யாரும் அவ்விடத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது.
நாங்கள் பாதைகளை மாற்றிக் கொள்ளவில்லை. பயணத்தை விரைவு படுத்த புதியபுதிய வாகனங்களை பயன் படுத்துகிறோம். சமுதயாப் பணிகள் எவ் வளவு அவசியமோ அதே அளவுக்கும் அரசியல் பணியும் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம்.
கே: அரசியல் கட்சியாக உங் களது இலக்கு என்ன?
ப: நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று கூறவில்லை. அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது நாங்கள் தான் என்று சபதம் எதுவும் எடுக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் முஸ்லிம் சமுதாயத் தினர் 10 சதவிகிதம் இருக்கின்றனர். 25 சட்டமன்ற உறுப்பினர்களும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மேயர் பதவி ஆகியவையே எங்களது உச்சக்கட்ட இலக்கு. எங்களுடைய உயரத்துக்கேற்ப எங்களது எல்லைகளை வரையறுத்துள்ளோம். இந்த அளவுக்குள் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக் கையும் உறுதியும் எங்களிடம் உள்ளது.
கே: அரசியலில் வெற்றி பெற சமுதாய ஆதரவு மட்டும் போதுமா?
ப: நாங்கள் இஸ்லாமிய சமுதாயத்தை மட்டும் நம்பி அரசியலில் இறங்கவில்லை. தமிழகத்தில் எங்களைப் போன்ற மற் றொரு சிறுபான்மை இனமான கிறிஸ்து வர்கள் 10 சதவிகிதத்தினர் உள்ளனர். அவர் களின் ஆதரவும் எங்களுக்கு வலுவாக உள்ளது. அதுமட்டுமன்றி எங்களுடைய ரத்ததான சேவைகள், ஆம்புலன்ஸ் உதவிகள், கல்வி மற்றும் மனித நேய பணிகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக் கான மற்ற சமூக மக்களும் சகோதரர் களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
கே: தமுமுக என்ற இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிபோல் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும்?
ப: நாங்கள் அரசியல் களத்தில் இறங்க போதுமான வகையில் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம் அரசியலில் வெற்றி தோல்வி மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடிய சாரசரி அரசியல் இயக்கமாக இருக்க மாட்டோ ம். கொள்கைகளையும் லட்சி யங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படக்கூடிய நாங்கள் எத்தகைய நிலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு புயல் வேகத்தில் இயங்குவோம்.
கே: உங்களை ஒரு மதவாத கட்சி யாக முத்திரை குத்த வாய்ப்புள்ளதே?
ப: நாங்கள் சாதிய கட்சியோ மதவாத கட்சியோ இல்லை. சமூக நல்லிணக்கத்தைக் காப்போம் சம உரிமைகளைப் பெறுவோம் என்பதுதான் எங்களது குறிக்கோள்.
மதவெறி, சாதி வெறி, மொ வெறி, இன வெறி போன்றவையெல்லாம் அரசி யலில் வப்பறியாக உள்ளது என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. இந்தத் தவறுகளைத் தீயிட்டு கொளுத்தி விட்டு நெறி தவறாத மனிதர்களை உருவாக்க நினைப்பதுதான் எங்களின் அரசியலில் சரியான பணியாக இருக்கும்.
கே: மக்கள் முன்னேற்றக் கழகத் தின் துவக்க விழா எப்போது?
ப: அரசியல் கட்சியை முறையாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அப்பணி நிறைவு பெற்றவுடன் சென்னை யில் மிகப் பிரமாண்டமான மாநாட்டைக் கூட்டி கட்சியின் தொடக்க விழாவை நடத் துவதற்கு முனைப்பு காட்டி வருகிறோம்.
கே: தனித்து போட்டியா அல்லது கூட்டணியா?
ப: கூட்டணி என்பது தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக அன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்.
கே: மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் பற்றி உங்களது கருத்து?
ப: மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் நிலை மிக கவலைக்குரிய தாக உள்ளது. மலாய் சமூதத்திற்கும் உள்ளேயும் நுழைய முடியாமல், இந்திய சமூகத்திற்குள்ளும் நிற்க முடியாமல் திசை தெரியாத கப்பலாக தவித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
மலேசியாவை வளப்படுத்தியதில் நெறிப்படுத்தியதில் மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 4 லட்சத்திற் கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு நாடாளுமன்றத்திலோ, செனட் சபை யிலோ, சட்டமன்றத்திலோ, ஊராட்சி களிலோ பிரதிநிதிகள் இல்லை. இந்திய முஸ்லிம்களுக்கு என்று கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு, ஈப்போ, ஜொகூர் பாரு மற்றும் பல இடங்களில் பள்ளி வாசல்கள் இருக்கின்றதே தவிர பள்ளிக்கூடங்கள் இல்லை. இதைப்பற்றி இந்திய முஸ்லிம் தலைவர்கள் மலேசிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
உணவகங்களும் மளிகைக்கடை களும் மட்டுமே வாழ்க்கையாக இருக் கக் கூடாது. ஒரு சமூகம் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் இருண்டு போய்விடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். சின்ன சின்ன சச்சரவுகளை புறந்தள்ளிவிட்டு பொது ஒற்றுமையோடு சமுதாய பிரச்சினை களை கருத்தில் கொள்ளவேண்டும். மலேசியாவில் வசிக்கும் இந்திய முஸ் லிம்கள் தங்கள் தாய்நாடு மலேசியா தான் என்பதை மறந்து விடக்கூடாது என்றார் தமீமுன் அன்சாரி.
Saturday, September 13, 2008
முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்
இதனை இந்து முன்னணியினர் கடுமையாக ஆச்சேபித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு கற்களும். செருப்புகளும் வீசப்பட்டன. இதில், காவல் கண்காணிப்பாளர் அமீத்குமார் சிங், தலைமைக் காவலர் செல்வமணி ஆகியோர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. அப்போது போலிஸார் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து தடியடி நடத்தினர். இதனால், பள்ளிவாசலில் இருந்த பலர் காயமடைந்தனர். பின்னர் 32 முஸ்லிம்களை போலிஸார் கைது செய்தனர்.
முஸ்லிம்கள் மீது தொடரும் தடியடி மனித நீதிப் பாசறை கண்டனம்
முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கலவர நோக்கில் வந்த சங்பரிவார சக்திகளுக்கு ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக, புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைக் கூட கொடுக்காமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக பள்ளிவாசலுக்குள் "பூட்ஸ்' கால்களுடன் நுழைந்து ரத்தம் வழிந்தோட மயங்கி விழும் அளவிற்கு நோன்பு வைத்திருந்த முஸ்லிம்களைத் தாக்கி பள்ளிவாசல் ஜன்னல் களையும் உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்த அப்பாவி முஸ்லிம்களை கைது செய்திருக்கின்றனர். காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித் தனமான கொடூரச் செயலை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.
தடியடியில் காயம்பட்ட முஸ்லிம்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் இரத்தம் வழிந்தோடும் நிலையில் பள்ளிவாசலுக்குள்ளே தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற கொடூர செயலை அரங்கேற்றியிருக்கின்றது காவல்துறை. இதை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் வழியாஉகவும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தெருக்கள் வழியாகவும் சென்று மததுவேஷமாக பேசி முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அதில் பலிகடாக்களாக ஆக்க திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறிக் கொண்டு கடையநல்லூர், பேர்ணாம் பட்டு, வேலூர், வேடசந்தூர், திண்டுக்கல், முத்துப் பேட்டை என முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தடியடித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை முஸ்லிம்களிடையே ஆழ்ந்த அதிர்ச்சியையும் பெரும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாகவும் கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்தான் சமூக அமைதி கெடுவதற்கும், மதக் கலவரத்திற்கும் காரணம் என பல வருடங்களாக பல உண்மையறிவும் குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்தும் இந்துக்களும், முஸ்லிம்களும் பல்வேறு சமயங்களில் கருத்து தெரிவித்தும் கூட இதில் அரசு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே ஏன்? மக்கள் ரத்தம் தானே சிந்துகிறது என்ற அலட்சியமா? எனும் கேள்வி மக்கள் மனதில் எழும்பியுள்ளது.
ஆகவே தடியடி நடத்தி முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையின் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. இந்த கொலைவெறியாட்டத்தை முன்னின்று நடத்தி சிறுபான்மை விரோதப் போக்குடனும் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அமீத் குமார் சிங், திருச்சி மாவட்ட எஸ்.பி. கலிய மூர்த்தி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாத் குமார், எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சிவ பாஸ்கரன், மன்னார்குடி டி.எஸ்.பி. மாணிக்க வாசகம் ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாக கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் ஊர்வலத்தை ஒருபோதும் அரசு அனுமதிக்கக் கூடாது. சதுர்த்தி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி அல்லாத மாற்றுப் பாதை அமைத்து நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையை மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது.
மேலும் வருங்காலங்களில் முத்துப்பேட்டை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் அமைதிக்கான இந்த செயல்திட்டத்தை அமுல்படுத்தி மாநிலம் முழுவதும் நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையும் மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது. முத்துப்பேட்டையில் தனது காட்டுமிராண்டித் தனத்தை மறைப்பதற்காக காவல்துறையினர் பல அப்பாவி முஸ்லிம்களைகைது செய்துள்ளனர். காவல்துறையால் திட்டமிட்டு பலிகடாக்களாக ஆக்கப்பட்ட இந்த அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மனித நீதிப் பாசறை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. தடியடியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
அ. ஃபக்ருதீன்,
மாநிலச் செயலாளர்,
மனித நீதிப் பாசறை.
தமுமுகவுக்கா? ததஜவுக்கா?
தமுமுகவுக்கா? ததஜவுக்கா?
இன்றைய நிலையில் தமிழக முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குபவர்கள் முஸ்லிம் பெயரைத் தன்னில் கொண்ட தமுமுக -வும் ஏகத்துவத்தைத் தன் பெயரில் கொண்ட ததஜவும் தான்.இந்த இரு அரசியல் அணிகளும் ஒன்றிணைந்தால் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
இவர்கள் பிரிந்து நிற்பதற்காகச் சொல்லப்படும் காரணிகளில் முக்கியமானது
பணப்பிரச்சனை.
இவர்கள் இடையிலான ஒற்றுமை:
இரு அணிகளுமே முஸ்லிம்கள்.இனி இவர்கள் பிரிந்து நின்று அணி சேர்ந்துள்ளவர்களைக் குறித்துப் பார்ப்போம்:
முதலில் தமுமுக ஆதரவு தெரிவிக்கும் கருணாநிதி.
1. ஜெயலலிதா இறக்குமதி செய்த பாஜக-வை தமிழகத்தில் வளர்த்தி விட்டவர்.
2. முஸ்லிம்களுக்கு நெஞ்சில் இடம் தருவதாக அல்வா கொடுப்பதில் நீண்ட நெடிய சுமார் 40 வருட பாரம்பரிய அனுபவம் உள்ளவர்.
3. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவிகளை 10 வருடம் சிறையிலிட்டு 150 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சீரழித்தவர்..
4. அந்தக் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 19 முஸ்லிம்களின் படுகொலை சம்பவத்தை வெற்றிகரமாக பாசிச சங்க்பரிவாரக் கும்பலுடன் இணைந்து நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தவர்.
5. அயல் ராஜ்யங்களான இலங்கை மற்றும் மலேசியாவில் குடியுரிமைப் பெற்று அந்நாட்டவர்களாக வாழ்பவர்களுக்குப் பிரச்சனை என்றவுடன் தன் நிலை மறந்து கவிதையாகவும் உரைநடையாகவும் ஆற்றாமையை வெளிப்படுத்தியவர், இந்தியாவிற்கு உள்ளேயே இந்தியக் குடிமகன்களாக வாழும் குஜராத் முஸ்லிம்கள் 3000க்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாகப் படுகொலைச் செய்யப்பட்டச் சம்பவத்தைக் குறித்துக்கருத்துக் கேட்கப்பட்ட பொழுது, 'அது அம்மாநிலத்தின் உள் பிரச்சனை' எனக் கூறி நழுவியவர்.
(கருணாநிதி ஓர் பச்சை துரோகச் சந்தர்ப்பவாதி என்பதற்கு இதனை விட வேறு ஆதாரம் ஏதும் தேவையில்லை).இப்படிப்பட்ட அயோக்கியனுடன் தான் சகோதரர்களிடமிருந்துப் பிரிந்து தமுமுக கூட்டணி வைத்துள்ளது.
இனி எம்.ஜி.ஆர் வளர்த்த அண்ணா திராவிட கட்சியை சுருட்டி கக்கத்தில் வைத்துள்ள ஜெயலலிதா குறித்து:சட்டமன்றத்திலேயே தன்னை ஓர் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட இவளைக் குறித்துக் கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
எனினும்,
1. இறையில்லமான பாபர் மசூதியை இடிக்க ஆதரவு தெரிவித்த இந்தியாவிலேயே ஒரே மாநில முதலமைச்சர் மட்டுமன்றி தமிழகத்திலிருந்து பாபர் மசூதியை இடிக்கக் கரசேவக ரவுடிகளை அரசு செலவிலேயே அனுப்பியவள்.
2. வடக்கில் இரத்த அறுவடை செய்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான பாஜகவைத் தமிழகத்திற்கு முதன்முதலாக இறக்குமதி செய்த, அண்ணா திராவிடக் கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் பாப்பாத்தி!!!
3. 3000க்கு மேற்பட்ட முஸ்லிம்களை உயிரோடு அறுத்தும் எரித்தும் நரதாண்டவமாடியச் சம்பவத்திற்குப் பிறகு நரமாமிச உண்ணி மோடி தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அடக்கமுடியாத மகிழ்ச்சியில் நேரடியாகவே சென்று பூங்கொத்து வழங்கி (3000 முஸ்லிம்களைக் கொன்று குவித்து வெற்றி வாகை சூடியதற்கு) வாழ்த்துக் கூறிய தேசப்பற்று மிக்க தாரிகை!!!. (முஸ்லிம்களைக் கருவறுப்பதில் ஆனந்தமடையும்பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த இவள் முஸ்லிம்கள் என வரும் பொழுது தனது இனத்தோடு சேர்ந்துக் கொள்வாள் என்பதற்கு இதனைவிட வேறு பெரிய தெளிவு ஏதும் தேவையில்லை)
4. இந்தியா அடக்குமுறையில் இருந்த ஆங்கிலேயன் காலத்திலேயே இருந்த உரிமை சுதந்திரத்திற்குப் பின் துரோக ஆட்சியாளர்களால் வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட உரிமை - இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு எப்பொழுதுமே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எங்குமே கிடைக்கக் கூடாது என சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதற்கு எதிராக விஷயத்தைக் கொட்டி வருபவள்.
5. இன்னும் பல அடுக்கலாம். இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.இப்படிப் பட்ட மனம் நிறைய நஞ்சுடன் வலம் வரும் இந்தப் பார்ப்பன வெறிப்பிடித்தவளுடன் தான், இணைந்திருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படும் எனச் சகோதரர்களிடமிருந்துப் பிரிந்து வந்த ஏகத்துவத்தின் காவலர்களான ததஜ, 'ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு தருவேன்' என்ற வாக்குறுதியைப் பேணாத(மெரீனா மாநாட்டில் இவள் தந்த வாக்குறுதியும் பின்னர் அவ்வாறுதரவேயில்லை எனக் கூறியதையும் நினைவில் கொள்ளவும்) இந்த நயவஞ்சகியுடன் சமரசம் செய்துக் கொண்டு கூட்டணி வைத்துக் கொண்டது
(இவ்விடம் முஃமின் ஒரு பொந்தில் ஒரு முறையே கொட்டு கொள்வான் என்ற நபிமொழியையும் நாம் நினைவில் நிறுத்துவோம்.
மேலும் தமுமுகவுடன் இருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு இடையூறு வரும், பாப்பாத்தி ஜெயலலிதாவுடன் இருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்குப்பாதுகாப்பு கிடைக்குமோ - மத மாற்றத் தடைச் சட்டம் நினைவுக்கு வரவேண்டும்)
இனி இவர்கள் மத்தியில் உள்ள முக்கியமான ஓர் ஒற்றுமை
திராவிடக் காவலன் கருணாநிதி, அண்ணா திராவிட பாப்பாத்தி ஜெயலலிதா இந்த இரு நயவஞ்சகக் கில்லாடிகளுமே முஸ்லிம்கள் அல்ல - யதார்த்தப் படைப்பாளனுக்கு எதிரிகள்.உண்மையாக நினைத்துப் பார்த்தால் உடம்பு புல்லரிக்கவெ செய்கிறது - நமது சமுதாயக் காவலர்களாக அடையாளம் காட்டி வரும் ததஜ மற்றும் தமுமுக தலைவர்கள் தங்களுக்கிடையில் ஒன்றுமில்லா உலக விஷயங்களுக்காகப் பிரிந்து நின்றுக் கொண்டு, இந்த நயவஞ்சகக் கூட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான நியாயங்களாகச் சப்பைக் கட்டுகளைக் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து!ததஜ, தமுமுக தலைவர்களே திருந்துங்கள்! அல்லது நிச்சயம் வல்ல இறைவனால் திருத்தியமைக்கப்படுவீர்கள்!சமுதாயத் தலைவர்களே! செல்லுமிடமெல்லாம் கேள்வி, பதில் பகுதி வைத்து அதிலும் அரசியல் விளையாட்டு நடத்தும் உங்களிடம் இந்த எளியோனின் ஓர் சிறு கேள்வி:
இறைவனின் எதிரிகளுடன் கூட்டணி வைக்கவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் உங்களுக்குக் கிடைத்தக் காரணங்களில் ஒன்று கூடவா உங்கள் சகோதர இயக்கங்களுடன் ஒருங்கிணைந்துச் செல்வதற்கும் அவர்களுடன் ஓரிடத்தில் அமர்ந்துச் சமுதாயப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் குறித்து அலசுவதற்கும் கிடைக்கவில்லை?இதற்கான பதில் நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். இல்லையெனில் இக்கேள்வி உங்களை மறுமை வரை விரட்டிக் கொண்டே இருக்கும்.
தீர்வு:
1. தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய இந்த இரு அணிகளுமே தங்களுக்கிடையில் ஒரே கருத்துள்ள சில விஷயங்களிலாவது ஒன்றிணைந்துச் செயல்படலாம் என ஓர் குறைந்தப் பட்ச ஒப்பந்தம் செய்து கொள்வது.
2. எக்காரணம் கொண்டும் சகோதரர்கள் இழிவு படும் விதமாகப் பொது இடங்களில் அவர்களின் குறைகளைப் பேசுவதில்லை என உறுதி எடுத்துக் கொள்வது(ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்குப் பாதுகாவலனாவான். அவனின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட அவன் எவ்வகையிலும் காரணமாக இருக்க மாட்டான்)
3. தங்களுக்குள் ஏற்பட்ட குறைந்தப் பட்ச விஷயங்களில் உள்ள உடன்படிக்கையினை எடுத்துக் கொண்டு மற்றைய ஜாக், மனித நீதி பாசறை, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக், ஜமாஅத்துல் உலமா என அனைத்து அமைப்புகளையும் ஒவ்வொன்றாக சமீபித்து அவ்விஷயங்களில் ஒருங்கிணைந்துச் செயல்பட வருமாறு அவர்களுக்கும் ஒற்றுமைக்கான அழைப்பு விடுத்தல்.தற்பொழுதைக்கு இவ்வளவு போதும்.
ஒரு சிறு ஆரம்பம் மட்டுமே நம்மிடமிருந்து வேண்டும்.அதாவது மனதார ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம். அதன் அடிப்படையிலான முன் முயற்சி. இதனை மட்டும் செய்ய ஆரம்பித்து விட்டால் பின்னர் உள்ள வழிகள் ஒவ்வொன்றையும் வல்ல இறைவன் அழகாக அமைத்துத் தந்து விடுவான் இன்ஷா அல்லாஹ்!நாம் ஒரு அடி நகர்ந்தால் இறைவன் இரு அடிகளும் நாம் நடந்தால் இறைவன் ஓடியும் நாம் ஓடினால் இறைவன் நமது கைகளாகவும் கால்களாவுமே மாறி விடுவான் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம்.இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி முன் எடுத்து வைப்பதை மட்டுமே.அதனை எடுத்து வைக்க முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுவதாக உரிமைகோரும் தமுமுகாவோ அல்லது ஏகத்துவத்தின் காவலர்களாகத் தங்களை அடையாளம் காட்டும் ததஜாவோ, யார் முதலில் முதல் அடியை எடுத்து வைக்கின்றீர்களோ அவர்களுக்கு இறைவனின் முழு அருளும் இரு உலகிலும் காத்திருக்கின்றது என்பதை மறவாதீர்கள்.
நன்றி : இறை நேசன்
Thursday, September 11, 2008
தினமலர் இணையதளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை!
Wednesday, September 10, 2008
மாபெரும் இஸ்லாமிய அறிவுப் போட்டி
அனைவர்களும் இதில் கலந்து சிறப்பித்து, பரிசுகளை அள்ளிச் செல்லுமாறுஅன்புடன் அழைக்கிறோம். உங்களது குழந்தைகளை அனுப்பி, இஸ்லாமிய அறிவுத் திறனை வளர்க்குமாறு கேட்கிறோம்.
அன்புடன்,
தாருல்ஸஃபா சாதிக்.
http://www.darulsafa.com/
Tuesday, September 9, 2008
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளர்
திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளரான கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டி நாட்டைச் சேர்ந்த பதினான்கு வயது நிரம்பிய நியாந்வி மஜலிவா கூறுவதைக் கேளுங்கள் இதோ :
தனது நாடான புருண்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கே ருவாண்டாவும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் டான்ஸானியாவும், மேற்குப் பகுதியில் காங்கோ நாடும் உள்ளன.
எனது தாயாரின் அறிவுரைப்படி திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கினேன்.பத்து வயதான போது திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கிய நான் 2007 ஆம் ஆண்டு நிறைவு செய்தேன்.
அரபி மொழி ஆசிரியரின் உதவியுடன் அரபி மொழி ஓதக் கற்றுக்கொண்ட நான், தனது தாயாரின் உந்துதலின் காரணமாகவே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என்கிறார்.
தனது தகப்பனார் ஒரு சிறிய வணிகர் என்றும், காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பள்ளி செல்லும் வரையிலும், பின்னர் பள்ளி விட்டு வந்த பின்னர் சூரியன் மறையும் வரையிலும் நான் திருக்குர்ஆன் மனனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இதற்காக எனது ஊரில் மிகச் சிறப்பாக கௌரவப்படுத்தப்பட்டேன்.
தனது ஊரில் 62 சதவீதம் பேர் ரோமன் கத்தோலிக்கர் எனவும்,8 முதல் 10 சதவீதம் பேரே முஸ்லிம்கள் என்றார். மீதமுள்ளவர்கள் கிறிஸ்துவத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்தோராவர்.
உள்நாட்டுப் போரின் காரணமாக தனது நாடு போதிய வளர்ச்சியடையவில்லை என்கிறார் நியாந்வி. தனது நாடு உலகிலுள்ள பத்து ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
- MUDUVAI IDHAYATH
http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10243869.html
Sunday, September 7, 2008
பனைக்குளத்தில் ரம்ஜானை முன்னிட்டு குரான் ஓதும் போட்டி
ரம்ஜானை முன்னிட்டு பனைக்குளத்தில் திருக் குரான் ஓதும் போட்டி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
குரான் ஓதும் போட்டி
மண்டபம் ïனியன் பனைக் குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்குரான் ஓதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி நேற்று நத்தர் ஒலியுல்லாஹ் தர்கா வளாகத்தில் தொடங் கியது.
விழாவுக்கு பனைக்குளம் ஜ×ம்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். முஸ் லிம் பரிபாலன சபை செயலா ளர் வக்கீல் அர்சத் உசேன், நிர்வாக சபை செயலாளர் அகமது கமால், ஊராட்சி தலைவர் சலாமுல் அன்சார், ஐக்கிய முஸ்லிம் சங்க செய லாளர் காதர் மைதீன், வாலிப முஸ்லிம் சங்க செய லாளர் ரசீது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
270 பேர்
விழாவில் பெருங்குளம் தலைமை இமாம் சாகுல் ஹமீது ஆலிம், ரியாஸ்கான், ஆற்றாங்கரை தஸ்தகீர், ஐக் கிய ஜமாத் நிர்வாகிகள், வாழுர், சித்தார்கோட்டை, அத்திïத்து, புதுவலசை, அழகன்குளம், ஆற்றாங்கரை, பெருங்குளம் பகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருக்குரான் ஓதும் போட்டியில் 270க்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரி சுகள் மற்றும் ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்படும்.
கேலிச்சித்திரமும் - நமது அணுகுமுறையும்:
தினமலர் ஏட்டில் வெளியான கேலிச்சித்திரத்தின் பாதிப்புக்களை – முஸ்லிம்களின் கொந்தளிப்பையும், போராட்டத்தையும் கண்டு வருகின்றோம்.
ஓர் முஸ்லிம் தன் உயிரினும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றான்.
அது அவனது நம்பிக்கையின் அடையாளங்களில் ஒன்று.
அந்த நம்பிக்கை புண்படுத்தப்படும் போது மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
ஒர் உண்மையை கேலிச்சித்திரத்தை வெளியிட்டவரும், அந்த பத்திரிக்கை ஆசிரியர்களும் நன்கு உணர வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முழு உலகுக்கே வழிகாட்டியாக வந்தவர் என்ற செய்திதான் அது.
அத்.21 – வ.எண்:107. இறைவன் கூறுகின்றான் “'நபியே! உம்மை நாம் உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பி உள்ளோம்".
எனவே ஒர் குறிப்பிட்ட நாட்டுக்கு, சமூகத்துக்கு என்று இல்லாமல், முழு உலகுக்கும் வழிகாட்டியாக, நன்னெறியை போதிப்பவராக, தீய நெறிகளை தடுப்பவராக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியமான – கடமையான ஒன்றுதான். அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
சாத்தியமான, ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வது மிகவும் பயன் தரக்கூடியது.
நீண்ட கால அடிப்படையில் உதவக்கூடியது.
மனமாச்சர்யங்களை வளர்க்காமல், மன இணக்கத்தை– மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த பெரிதும் துனை புரிய வல்லது.
இத்துடன் நின்று விடாமல், சில ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை நாம் பேண வேண்டும்.
I. ஆக்கபூர்வமான அணுகுமுறைகள்:
1. சட்டத்தின் மூலமாக பிரச்சனையை சந்திப்பது.
2. ஊடகங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்வதுடன், போதிய விளக்கங்களை தருவது.
3. அமைதி வழியில் போராட்டம் நடத்துவது.
4. சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திந்து நமது கருத்துக்களை தெரிவிப்பது – கண்டனத்தை நேரில் சமர்ப்பிப்பது.
5. அரசுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றினைந்து குரல் கொடுப்பது.
6. இது போன்ற சூழல்களிலாவது சமுதாயம் ஓர் அணியில் திரள்வது –நமது எதிர்ப்பை ஒருமுகப்படுத்துவது அவசியம்.
II. அழைப்பாளனாக நாம் செய்ய வேண்டியது என்ன?
1. குறைந்த பட்சம் ஒர் நபர், ஐந்து முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நபி வழியையும்,
இஸ்லாத்தையும் எடுத்துக் கூற, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.
2. முழு மனித சமூகத்துக்கும் நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்து நல்வழிப் படுத்துபவராகவும்தான் நபி(ஸல்) அனுப்பப்பட்டுள்ளார்கள். (34:28)
என்ற இறைச் செய்தியை எல்லோருக்கும் பரப்ப வேண்டும்.
3. “நபிகள் நாயகம், உலக மக்களுக்கு ஒர் அருட்கொடை” என்ற (21:107) இறை வாக்கையும், மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.
4. நபி(ஸல்) வாழ்வில் ஓர் துறைக்கு மட்டும் என்றில்லாமல் - சகலத் துறைகளுக்கும் வழிகாட்டியாக,
பேச்சளவில் மட்டும் அல்லாமல் - நடந்து காட்டிய – செயல்படுத்தி வெற்றி கண்ட,
ஓர் அழகிய முன்மாதிரி என்பதை யாவருக்கும் புரிய வைக்க வேண்டும்.
III – நபிகள் நாயகமும் - நமது வாழ்க்கையும்:
1. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் புரிந்து நமது வாழ்வில் வாய்மையுடன் பின்பற்றுதல் வேண்டும்.
நபியின் மீது நாம் கொண்டுள்ள நேசம், நமது தினமலர் பத்திரிக்கைக்கு எதிரான எதிர்ப்பில் காட்டப்படுவதுடன் நில்லாமல்,
- முழு வாழ்விலும், அண்ணலாரை வழிகாட்டியாக ஏற்று நடக்க வேண்டும்.
2. எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளுக்கு, இறை வழிகாட்டலை, நபி வழியை மூல ஆதரமாக எடுத்து நடக்க வேண்டும்.
3. நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், வழிகாட்டல் தவிர வேறு யாருடைய பேச்சையும் சத்தியத்துக்கு அளவுகோலாக கொள்ளக் கூடாது.
4. நமது குடும்பத்து உறுப்பினர்களிடம், நண்பர்களிடம் சொந்த பந்தங்களிடம் அண்ணலார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் போதிக்க வேண்டும்.
5. நபி (ஸல்) அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பு மற்றும் நேசம், அனைத்து நேசங்களை விடவும் மோலோங்கி இருக்க வேண்டும்.
6. ஆர்பாட்டத்துடன் தேவை ---- கல்வி, பொறுமை, தூர நோக்கு, அழைப்புப்பணி, சொல்லில்-செயலில் நபி வாழ்க்கை.
ஆம். நபி வழியில் நமது வாழ்க்கை, காலத்தின் கட்டாயமும், நமது ஈருலக வெற்றிக்கான உத்திரவாதமும்.
அன்புடன்
இறைவழி சகோதரர்கள்
Thursday, August 14, 2008
தோப்புத்துறையில் சுதந்திர தின கொடியேற்றுவிழா
தோப்புத்துறையில் சுதந்திர தின கொடியேற்றுவிழா
தோப்புத்துறை யில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் தேசிய கோடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபற்றது, அதில் பலர் பங்கேற்றனர், வேதாரணியம் நகராட்சி துணை தலைவர் சி.சாகுல் ஹமீது அவர்கள் கொடியையேற்றி சிறப்புரை நிகழ்த்தினார், கே. பால கிறிஸ்ணன் ,நேனா ஆரிப் மற்றும் விஎஒ அப்துல் சலம் ஆகியோர் கலந்து கொண்டனர், சுதந்திர தின கோசங்கள் எழுப்ப பட்டது , தமுமுக வினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி- ஆதம்.ஆரிபின்
Saturday, August 2, 2008
குளச்சலில் 70நாட்கள் தஹ்வாப் பிரச்சாரம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
01/08/2008 வெள்ளிக்கிழமை குளச்சல் முனீஃப் பள்ளியில் நடந்த ஜும்ஆப் பேருரையின் தொகுப்பை செவியுற இங்கே சொடுக்கவும்.
இன்ஷா அல்லாஹ் வரும் 17/10/2008 முதல் 26/10/2008 வரை (70 நாட்கள்) நன்மையை ஏவித் தீமையை விலக்கும் தொடர் தஹ்வாப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் தீவிரவாதம், வரதட்சணை மற்றும் சமூகக் கொடுமைகளுக்கெதிராக பொதுக் கூட்டங்கள், தெருப் பிரச்சாரங்கள், பிரசுரப் பிரச்சாரங்கள் மற்றும் வீடுவீடாகச் சென்று நேரடித் தஹ்வாப் பிரச்சாரங்களும் நடைபெற உள்ளது. வெற்றிபெறத் துஆச் செய்யுங்கள்.
அத்துடன் இந்தப் பிரச்சாரங்கள் முழுமையுடன் வெற்றிபெற உங்களால் இயன்ற நிதியுதவியும் செய்து உதவும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.
பிரச்சாரங்களின் முழுவிபரம் அறிய இங்கே சொடுக்கவும்.
உங்களது நிதியுதவியை அனுப்பிவைக்க தொடர்பு கொள்ளவேண்டியது. சகோதரர் மாஹீன் - +91 93452 35598
( மஸ்ஜிதுல் முனீஃபின் தலைவர் - குளச்சல் )
காசோலைகள் அனுப்புவோர் கீழேக் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
Account Details to send your Donations:
வங்கி: Tamilnad Mercantile Bank Ltd., Colachel Branch, Joint Ac No#000174# Mr.S.Maheen Aboobakker or M.Mujeebu Rahman.
அல்லாஹ் தஆலா இந்த தஹ்வாப் பணிக்கு உதவும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ஈருலகிலும் அதற்குரிய நல்லருளை வாரி வழங்குவானாக! ஆமீன்."
மேலதிக விபரத்திற்கு: sathick@gmail.com -ல் தொடர்பு கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.
Saturday, July 5, 2008
தோப்புத்துறை'யில் வரதட்சனை எதிர்ப்பு திருமணம்
நாகை மாவட்டம் தோப்புத்துறை'யில் வருகின்ற 13 ஆம் தேதி (SUNDAY) காலை என்னுடைய திருமணம் ( வரதச்சனை எதிர்ப்பு திருமணம்) நடைபெற உள்ளது, இத் திருமணம் உள்ளூர் தவ்ஹித் ஜமாஅத் ( JAQH )தலைமையில் நடைபெற உள்ளது, சிறப்பு பேச்சாளர்களும் வருகை தர உள்ளார்கள், மேலும் நான் 1999 ஆண்டுகளில் ஜமாஅத் மன்றத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது, இனிதே நடைபெற இறைவனிடம்
பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் .... ஆதம். ஆரிபின்
இலவச நோட்டு புத்தகங்கள்-சீருடைகள்
இலவச நோட்டு புத்தகங்கள்-சீருடைகள் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு வழங்கினாலும் மாணவ-மாணவியரின் ஆர்வ மிகுதியால் கூட்ட நெரிசலில் முட்டி மோதினர். இவற்றை விநியோகிப்பதற்காக கிரஸண்ட் சங்க (CWO) , கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் நியமிக்கப்பட்டு 750 மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.
நன்றி : ஐக்கிய தவ்ஹித் ஜமாஅத் ப்லோக்
மதுக்கூரில் போதை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
நிகழ்ச்சிக்கு மதுக்கூர் பள்ளித் தலைமையாசிரியர் சாந்தகுமாரி தலைமை வகித்தார். களவிளம்பரத் துறை அலுவலர் ஆ. இளங்கோவன், தொண்டு நிறுவன இயக்குநர் விக்டோரியா மேரி, உதவித் தலைமையாசிரியர்கள் கண்ணன், செல்லத்துரை, லட்சுமணன், அழகர், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.
Wednesday, July 2, 2008
அதிரம்பட்டினத்தில் படிப்பகம் திறப்பு
இந்த சிறப்பான ஏற்பாடுகளை தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பக இளைஞர்கள் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்இரத்தம் கொடுத்து இன்னுயிர்க்காக அனைவரும் முன் வருமாறு அழைக்கப்படுகிறார்கள்
அதிரையில் 24மணிநேரமும் இரத்தம் தேவைபடுவோர் எங்களை அனுகவும்
சரஃபுதீன் 9944450965, B.அஸ்ரஃப் 9976438566, அனஸ்9790282278 முகம்மத்9894848745 , தாரிக்9894988713 ,
Source : Adirai எக்ஸ்பிரஸ்
Tuesday, July 1, 2008
சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அழைப்பு
பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்காமல் பயில்பவர்களுக்கு ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை மாதந்தோறும் 100ம், விடுதியில் தங்கி 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.600 வீதம் பத்து மாதங்களுக்கு மட்டும் கணக்கிட்டு வழங்கப்படும். பள்ளிப் படிப்பிற்கான கல்வித்தொகை பெறுவதற்கு முந்தைய பள்ளி இறுதித் தேர் வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங் களை உரிய சான்றுகளுடன், பயிலும் பள்ளிகளில் ஜூலை 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப விபரங்களை பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பு வாரியாக பிரித்து, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு ஜூலை 15ம் தேதிக்குள் "சிடி'யில் பதிவு செய்து சமர்ப்பிக்கவேண்டும். கல்வி உதவித் தொகை (புதியது) விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Monday, June 30, 2008
ஷார்ஜாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
மேலும் விபரங்களுக்கு 050 8606498 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
Sunday, June 29, 2008
இலவச பொது மருத்துவ முகாமில் சிகிச்சை
Saturday, June 28, 2008
ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஊர் பள்ளிவாசல் தடை!
- அடக்கஸ்தலத்தின் பூட்டை உடைத்து தவ்ஹீத் சகோதரர் ஜனாசாவைநல்லடக்கம் செய்தனர்!
- தஞ்சை வலங்கைமான் சம்பவம்!
தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் -இல் 15-06-08 (ஞாயிற்றுக் கிழமை) அன்நூர் இஸ்லாமிக் கல்லூரியின் தலைவருமான சகோ: ஷாஜகான் அவர்களின் சின்ன தாயார் அவர்கள் இயற்கை எய்தினார்கள்.
அவர்களின் நல்லடக்கத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேலையில் 'தன் சின்ன தாயாருக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஷாஜகான் அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறை சமாதானத்தில் இறங்கியும் சமாதானம் ஆகாததை தொடர்ந்து பள்ளியின் அடக்கஸ்தலத்தின் பூட்டு உடைக்கபட்டு முறைப்படி ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி: த.த.ஜ இணையத்தளம்
ஆம் தேதி என்னுடைய திருமணம் நடக்க இருப்பதால் நமது சமுதாய செய்திகள் வெளியிடவதில் தாமதம் ஏற்படும் , நமதூரில் முறையான இணைய தொடர்பு வசதி இல்லாததால் இச் சிரமத்திற்கு வருந்து கிறேன்...
மேலும் எனது திருமணம் வரதட்சணை மற்றும் ஆடம்பரம் இன்றி நடக்க இருக்கிறது , இத் திருமணம் நல்லவிதமாக நடந்து முடிய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என்றும் உங்கள் சகோதரன்
ஆதம்.ஆரிபின்
இந்தியாவில் தொடர்க்கு.... 0091 97863 85245 , அமீரகத்தில் 00971 501657853
Wednesday, June 25, 2008
ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்
Tuesday, June 24, 2008
முதுகுளத்தூரில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா.
முதுகுளத்தூரில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா 28-06-2008 அன்று மாலை 6 மணியளவில் தேரிருவேலி முக்குரோடு வேன் ஸ்டாண்ட் திடலில் நடைபெற உள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் M.வாவா ராவுத்தர் கூறுகையில்….நமது நகர மக்கள் அவசர காலங்களில் மற்றும் பிரசவ நேரங்களில் வாகனங்கள் கிடைக்கமால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு நேரங்களில் காலதாமதாகவே ஆஸ்பத்திக்கு செல்லும் நிலையுள்ளது. இதனால் சொல்லமுடியாத பலதுயங்கரளுக்கு ஆளாகின்றனர்.அதுபோல் இறந்தவர்களின் உடலை பாதுகாக்க பிரிஜர் பாக்ஸ் அவசியமானதகும். இவைகளுக்கெல்லாம் நாம் பரமக்குடி போன்ற பக்கத்து ஊர்களையே நம்பியுள்ளோம்.
எனவே தமுமுகவின் சார்பில் வசூலித்து குறைந்த கட்டணத்தில் அனைவரும் பலன் பெரும் வகையில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் பாக்ஸ் அர்ப்பணிக்க உள்ளோம்.28-06-08 அன்று மாலை 6 மணியளவில் மூன்று MLAக்களின் வாழ்த்துரையுடன்,மூன்று ஜமாத்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் வக்பு வாரியத்தலைவர்,எங்கள் இயக்கச் செயலாளர் சகோ.ஹைதர் அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை வழங்கிறார்.
ஏழைகளுக்கு மிகவும் சலுகை கட்டணத்திலும், அவசர விபத்து மற்றும் முக்கிய நேரங்களில் சேவை செய்யவும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும் என்று தகவலை கூறினார்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.
Monday, June 23, 2008
முத்துப்பேட்டை மின் வாரியத்தை கண்டித்து மாபெரும் தொடர் போராட்டம் தமுமுக அறிவிப்பு
Sunday, June 22, 2008
ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் சி.கண்ணையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மார்க்கத்தில் ஏற்கனவே அகலப் பாதை போடும் பணி முடிவடைந்துவிட்டது. சோதனை ஓட்டமும் மார்ச் மாதத்திலேயே முடிந்து விட்டது. இருப்பினும் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்காமல் உள்ளது.
இந்த மார்க்கத்தில் விரைவில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க ரயில்வே நிர்வாகம் உரிய, விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேன்டும் என்று கோரியுள்ளார்
சைபர் கிரைம் படிப்பு அறிமுகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) இணைந்து, முதுநிலை சைபர் சட்ட பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் அறிமுக விழா, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், இக்னோ இணைவேந்தர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா, இக்னோ சட்டப் பள்ளி இயக்குநர் கிருஷ்ணாராவ், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் வணங்காமுடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சைபர் சட்ட பட்டயப்படிப்பு குறித்து இக்னோ இணைவேந்தர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது: முதுநிலை சைபர் சட்ட பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள், தரமணியில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. இந்த படிப்பு 6 மாத காலம் கொண்டது. கல்விக் கட்டணம் ரூ.5,000. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.100.
அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்களை பெற ரூ.150க்கு டிடி எடுத்து, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள், அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் வரும் 23ம் தேதி (நாளை) முதல் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.